Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சர் விஜயபாஸ்கர் கார் டிரைவர் செபாஸ்டியன்- இந்திய பணக்காரர் பட்டியலில்…

அமைச்சர் விஜயபாஸ்கர் கார் டிரைவர் செபாஸ்டியன்- இந்திய பணக்காரர் பட்டியலில்…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் டிரைவர் செபாஸ்டியன் இந்திய பணக்கார பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டன் கணக்கில் உதவியாளர்கள் இருப்பதால், செபாஸ்டியனும், அமைச்சர் ஆசியால் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து தொழிற்சங்கத்தலைவராகிவிட்டார்.

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்த போது, செபாஸ்டியன் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, விஜயபாஸ்கரின் முக்கிய  ஆவணங்களை பாதுகாத்தவர்.  அதனால் அமைச்சர், செபாஸ்டியன் என்ன செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்.

 கடந்த வருடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் ஒருவர் மருத்துவமனை டீன் கையெழுத்தை போட்டு சிக்கிய விவகாரத்தில் செபாஸ்டியனுக்கு முக்கிய பங்கு உண்டு. அமைச்சர் காலில் விழுந்து தன்னை காப்பாற்றிக்கொண்டார் செபாஸ்டியன்..

 தற்போது செபாஸ்டியன் தன் மனைவி பெயரில் TN 55 BT 5555 TOYOTA கார் வாங்கி 25.7.19ல் பதிவு செய்துள்ளார். செபாஸ்டியனே டிரைவர்.. தன் காருக்கு பன்னீர்செல்வம் என்ற டிரைவர் தனக்கு ஒட்டுநராக அமர்த்தியுள்ளார்..இந்திய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார் இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை..

 புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர் செபாஸ்டியன் கார் வாங்கமுடியுமா? என்று கேள்வி எல்லாம் கேட்டு, அண்ணன் செபாஸ்டியனை டென்சாக்கிவிடாதீர்கள்..

  அண்ணா தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் செபாஸ்டியன், அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி என்பதால், அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகம் கண் அசைவில்தான் நடக்கிறது.

 திமுக தொழிற்சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் கீரனூர் மதியழகன் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக, தற்போதைய பொதுச் செயலாளர் வேலுச்சாமி வெற்றி பெற பல லட்சம் செலவு செய்ததாக தொமுசவில் உள்ளவர்களும்,  புதுக்கோட்டை திமுகவினரும் புலம்புகிறார்கள்.  இந்த புலம்பல் அண்ணா அறிவாலாயத்துக்கு கேட்குமா?

 செபாஸ்டியன் கண் அசைவில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகம் நடப்பதால், நிர்வாகத்தின் ஊழல், நிர்வாக சீர்கேடுகளை மற்ற கட்சிகளின் தொழிற்சங்கத்தினரும் வாயை திறப்பதில்லை ஏன்.. என்ற கேள்வியை அப்பாவி தொழிலாளிகள் கேட்கிறார்கள்..

 செபாஸ்டியனின் கண் அசைவு நிர்வாகத்தால்,  புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மூடு விழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..

                           மக்கள்செய்திமையம் மக்களுக்காக..    

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *