Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை –ஜமீன் பல்லவபுரம்- சரவணா செல்வரத்னம் வணிக வளாகம் விதிமுறைகளை மீறி அனுமதி- ச.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கடிதம் குப்பையில்…

சென்னை –ஜமீன் பல்லவபுரம்- சரவணா செல்வரத்னம் வணிக வளாகம் விதிமுறைகளை மீறி அனுமதி- ச.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கடிதம் குப்பையில்…

சென்னை அருகில் பல்லவபுரம் அருகில் உள்ள ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்குகள் வணிக கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 21.8.2019ல் விதிமுறைகளை மீறி அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் ச.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளருக்கு 7.3.2019ல்(அரசு நிலை கடித எண்.48) எழுதிய கடிதத்தில் உள்ள விதிமுறைகள்/நிபந்தனைகள் செயல்படுத்தாமல்  திட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  1.  சரவணா செல்வரத்னம் கட்டுமான பணிகளை தொடங்கிவிட்டது. கட்டுமான பணிகளை தொடங்கும் முன்பு திறந்தவெளி ஒதுக்கீட்டுப்பகுதிகளை ஒதுக்கீடு செய்து, பல்லவபுரம் நகராட்சியில் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் திறந்தவெளி ஒதுக்கீட்டுப்பகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை.
  2. வாய்க்காலில் வெள்ளப்பெருக்கின் அளவிலை கருத்தில் கொண்டும் மனையினை இருபகுதியாக பிரிக்கும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பொதுப்பணித்துறையிடமிருந்து பெற்று திட்ட அனுமதி வழங்குவதற்கு முன் சமர்பிக்கப்பட வேண்டும்( 23.7.19ல் தான் Revised Plan தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை 20.3.2019ல் என்.ஒ.சி கொடுத்துவிட்டது எப்படி?)

   இப்பாலமானது உத்தேச கட்டுமான திட்டப்பகுதியின் திறந்தவெளி ஒதுக்கீட்டுப்பகுதிகளையும், மின்மாற்றி அமைய உள்ள இடங்களையும் அடையும் வகையில் கட்டப்பட வேண்டும்.

  இந்த நிபந்தனையை சி.எம்.டி.ஏயும் கண்டுகொள்ளவில்லை. பல்லவபுரம் நகராட்சியும் இந்த நிபந்தனையை செயல்படுத்தவில்லை.

  • திட்ட அனுமதி வழங்கு முன்னர் MMRD சாலையை அடையும் வகையில் உத்தேச இடத்திலிருந்து வடமேற்கு பகுதியில் கூடுதல் வழி அமைக்கப்பட வேண்டும். இந்த நிபந்தனை நிறைவு செய்யப்படாமல், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் திட்ட அனுமதி வழங்கியது எப்படி?
  • MMRD சாலையிலிருந்து உத்தேச இடத்திற்கு செல்லும் சாய்தள பாதையினை சுட்டிக்காட்டும் திருத்திய வரைபடம் திட்ட அனுமதி வழங்கும் முன் பெறப்பட வேண்டும். மேற்கூறிய மாற்றங்களுக்கு தகுந்தவாறு வாகன நிறுத்துமிடம் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிபந்தனை நிறைவு செய்யப்பட்டதா என்று சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் –செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அய்யா பதில் அளித்தால், அதையும் மக்கள்செய்திமையம் வெளியிட தயாராக உள்ளது.

 இப்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் நிபந்தனை கடிதங்களை தூக்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, விதிமுறைகளை, சட்டத்துக்கு புறம்பாக சரவணாசெல்வரத்னம் வணிகவளாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் பாராட்டுவோம்.. நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்வோம்..

                                  மக்கள்செய்திமையம் மக்களுக்காக

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *