Breaking News
Home / பிற செய்திகள் / மக்கள்செய்திமையத்தின் பெயரில் அதிமுக அரசின் ஊழல்கள்- மத்திய அரசிடம் குவியும் புகார்கள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்.

மக்கள்செய்திமையத்தின் பெயரில் அதிமுக அரசின் ஊழல்கள்- மத்திய அரசிடம் குவியும் புகார்கள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்.

மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd ஆகிய பெயர்களில், தமிழக ஆளுநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு  சிலர்  அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் புகார்களாக அனுப்பி வருகிறார்கள்.

 இந்த ஊழல் புகார்கள், ஏதோ வகையில் அஞ்சல் மூலம் நமக்கு வந்து சேருகிறது. நாம் அந்த ஊழல் புகார்களை பார்த்த போது, இப்படியெல்லாம் ஊழல் நடக்குமா என்று அதிர்ச்சியடைந்து விட்டோம். நமக்கு அஞ்சல் மூலம் கிடைத்த ஊழல் புகார்கள் உண்மையா என்று தெரிந்து கொள்ள, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தகவல்கள் கேட்டு பெற்ற போது, ஊழல் புகார்கள் உள்ள தகவல் அனைத்து உண்மை என்பது உறுதியாகி உள்ளது.

  ஆனால் மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd பெயரில் அனுப்பிவைக்கப்படும் ஊழல் புகார்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd பெயரை போலியாக பயன்படுத்துவது, சட்டத்துக்கு புறம்பானது.

 மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd ஆகிய பெயர்களில், அதிமுக அரசின் ஊழல் புகார்களை அனுப்புபவர்கள் யார் என்பதை கடந்த 30 நாட்களாக புலானய்வு செய்து, கண்டுபிடித்துவிட்டோம்.

  தமிழக அரசில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள், மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd ஆகிய பெயர்களில் அதிமுக அரசின் ஊழல்களை அனுப்பி வருவதை உறுதி செய்துள்ளோம்.

 மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd ஆகிய பெயர்களில் அனுப்பப்படும் ஊழல் புகார்கள், நிர்வாக சீர்கேடுகளுக்கு நமக்கு மத்திய அரசிடமிருந்து பதிலும் வருகிறது.

 R.R infra construction Madurai and S.P.K and co Ramanathapuram இந்த இரு நிறுவனங்களில் பணியாற்றும் SITE workersக்கு ESI Scheme செயல்படுத்துவது இல்லை என்று Ministry of Labour and employment, Govt of india/ Sub regional office Madurai பதிலும் கிடைத்துள்ளது.

 மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd பெயரில் தமிழக ஆளுநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு  அதிமுக அரசின் ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் அனுப்புவதில் நமக்கு உடன்பாடு கிடையாது. எங்கேயாவது.. எப்படியாவது தவறு நடக்க வாய்ப்பு உள்ளது.

 makkalseithimaiyam news(OPC) pvt ltd லெட்டர் பேடில் மட்டும்தான் அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை புகார் மனுவாக ஆதாரங்களுடன் அனுப்புவது வழக்கம் என்பதை மேதகு ஆளுநர் மற்றும் மத்திய, மாநில அரசின் அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *