Breaking News
Home / பிற செய்திகள் / CMDA சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி மீது ஊழல் வழக்கு- நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் ரூ1000கோடி ஊழல்- சட்டத்துக்கு புறம்பாக 10,000 அப்ரூவல்கள்..

CMDA சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி மீது ஊழல் வழக்கு- நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் ரூ1000கோடி ஊழல்- சட்டத்துக்கு புறம்பாக 10,000 அப்ரூவல்கள்..

சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி தெரியாமல் ஒரு கோப்பு கூட நகராது. சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் –செயலாளராக கடந்த 15 ஆண்டுகளில் இருந்த எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், ரூத்ரமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 ஊழல் சக்கரவர்த்தி ரூத்ரமூர்த்தியின் ராஜாங்கத்தில்தான் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல் ஆகிய நகராட்சிகள் செயல்படுகிறது. இந்த நகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகளுக்கு ஊழல்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுவர் ரூத்ரமூர்த்தி.

 ரூத்ரமூர்த்தி ஆசியால் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல் ஆகிய நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவுகளில் 15ஆண்டுகலில் கொடுக்கப்பட்ட 10,000 அப்ரூவல்கள் சட்டத்துக்கு புறம்பானது. ரூத்ரமூர்த்தி ஆசியால் நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவில் நடந்த ஊழல்களின் மதிப்பு சுமார் ரூ1000கோடி..

 ரூத்ரமூர்த்தி மீது 17(a)(1) ஊழல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு மக்கள்செய்திமையம் மூன்று புகார்கள் அனுப்பி உள்ளது.

 இந் நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறையும், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையும் இணைந்து ஊழல் சக்கரவர்த்தி ரூத்ரமூர்த்தி மீது 17(a)(1) ஊழல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய 18.7.2019ல் அரசாணை வெளியாகி உள்ளது.

 இந்த அரசாணையை 10.9.2019ல் சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 ரூத்ரமூர்த்தி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அரசாணை வெளியிட்ட பிறகும், ரூத்ரமூர்த்தி சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார். உறுப்பினர் –செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், வழக்கம் போல் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார் நான் என்ன செய்வது என்று பதில் அளிக்கிறார்.

 ஊழல் சக்கரவர்த்தி ரூத்ரமூர்த்தி பின்னணியில் ஊழல் செய்த, சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் சில நாட்களில் விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்..

                                மக்கள்செய்திமையம் மக்களுக்காக

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *