Breaking News
Home / பிற செய்திகள் / காவல்துறையில் ரூ350 கோடி ஊழலா?- எல்காட்டில் பல கோடி ஊழல் புகழ் அன்புசெழியன் ஐ.பி.எஸ் சிக்கியுள்ளரா?

காவல்துறையில் ரூ350 கோடி ஊழலா?- எல்காட்டில் பல கோடி ஊழல் புகழ் அன்புசெழியன் ஐ.பி.எஸ் சிக்கியுள்ளரா?

தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் எஸ்.பியாக இருக்கும் அன்புசெழியன் ஐ.பி.எஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல்துறைக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளார் என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி ஐ.பி.எஸ், விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 அன்புசெழியன் கூடுதல் எஸ்.பி(தொழில் நுட்பம்) இருக்கும் போது எல்காட் நிறுவனத்துக்கு  பொது மேலாளர்(நெட் ஒர்க்) என்ற பதவிக்கு அயல்பணியில் 1.1.2009ல் சேர்ந்தார். எல்காட்டில் மடிக்கணினி கொள்முதலில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் சிக்கியவர். 31.12.2012 வரை எல்காட்டில் அயல்பணியில் தொடர்ந்தார். 2011ல் அதாவது அதிமுக ஆட்சியில் எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் உடன் கூட்டணி அமைத்து அன்புசெழியன் ஐ.பி.எஸ் 25.8.2011ல் கொள்முதல் செய்யப்பட்ட 5,500 மடிக்கணினியில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

 எல்காட்டில் அதுல் ஆனந்த் உடன் கூட்டணி அமைத்து மடிக்கணினி ஊழலை அரங்கேற்ற 1.1.2011 முதல் 31.12.2012 வரை அயல்பணி நீட்டிப்பு கொடுத்த பெருமை ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்யை சேரும்.

 அதுல் ஆனந்த், அன்புசெழியன் ஐ.பி.எஸ் இருவர் கூட்டணியின் மடிக்கணினி ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம், விஜிலென்ஸில் புகார் கொடுத்தது. ஆனால் அந்த புகார் குப்பைக் கூடைக்குதான் போனது.

  1.1.2013 முதல் பதவி உயர்வில் அன்புசெழியன் ஐ.பி.எஸ் காவல்துறையில் தொழில் நுட்ப பிரிவு எஸ்.பியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

 மத்திய அரசு, மாநில அரசும் சேர்ந்து தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்தும்  தொடர்ச்சியான திட்டத்துக்கு சுமார் ரூ500கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் அன்புசெழியன் ஐ.பி.எஸ் காட்டில் பண மழை கொட்டியது..

This image has an empty alt attribute; its file name is Anbu-che-1-723x1024.jpg

   2012-13ல்

  VHF Handed sets – Rs 15,000/-

  VHF Mobil Sets – Rs 15,000/-

 VHF Static Sets – Rs 30,000/-

Reflective Jacket –Rs 3000/-

Reflective Baton – Rs 1000/-

Emergency light – Rs 2000/-

2014-15ல்

VHF Handed sets – Rs 22,000/-

  VHF Mobil Sets – Rs 22,000/-

VHF Static Sets – Rs 38000/-

Reflective Jacket –Rs 3300/-

Reflective Baton – Rs 3300/-

Emergency light – Rs 10,000/-

 இப்படி 90 வகையான காவல்துறைக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் கொள்முதலில் சுமார் ரூ300 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல்கள் தொடர்பாக விரிவாக நாளை பார்க்கலாம்..

  என்னை பொய் வழக்கில் கைது செய்த போது, குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறை ஆய்வாளர் இந்த கோப்பைதான் வீட்டில் ,சோபாவை கிழித்து, தலையணை, மெத்தைகளை கிழித்து தேடினார்..

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *