Breaking News
Home / பிற செய்திகள் / நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்- ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி மனோகரன்.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்- ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி மனோகரன்.

சேலையூர் ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி பில்டர்ஸ் மனோகரன், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.                                

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி(சர்வே எண்.145/3A) பெரும் பகுதி ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. 30.8.2014ம் தேதி மாலை ஜேசிபி மூலம் ஏரிக்கரையின் பின் சரிவினை RUBI BUILDERS நிறுவனம் வெட்டி சேதப்படுத்தி, அகலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உதவி பொறியாளர் நீர் பாசனப்பிரிவு குஜராஜ், சேலையூர் காவல் நிலையத்தில் 1.9.2014ல் புகார் கொடுத்தார்.  சேலையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

     சேலையூர் ஏரியின் பின் சரிவு பகுதி முழுவதும் RUBI BUILDERS உள்ளிட்ட சிலரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது.  சேலையூர் ஏரி சர்வே எண்.145/3A உள்ள பரப்பளவை முழுவதையும் ஆய்வு செய்து, ஆக்ரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையின் நீர் பாசனப்பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை.

 RUBI BUILDERS பொதுப்பணித்துறையின் நீர் பாசனப்பிரிவு அதிகாரிகளை மாற்றிவிட்டு, தனக்கு வேண்டிய அதிகாரிகளை மாறுதல் செய்து கொண்டு வந்துவிட்டார். அதனால் சேலையூர் காவல் நிலைய புகார் குப்பைக் கூடைக்கு போனது.29.7.2019வரை சேலையூர் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்( கடித எண்.2063/கோ.99 2019 நாள் 29.7.2019) உறுதி செய்து உள்ளார். அதே போல் தாம்பரம் வட்டாட்சியரும் ரூபி பில்டர்ஸ் ஆக்ரமிப்பை அகற்றவில்லை என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

 RUBI BUILDERS சேலையூர் ஏரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி,விற்றும் விட்டது..

 உதாரணமாக 10.3.2014, 24.3.2014, 26.3.14, 27.3.2014, 28.3.2014ல் மட்டும் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு செம்பாக்கம் நகராட்சி 16 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட  விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, நீர் பிடிப்பு பகுதிகளில் அப்ரூவல் வழங்கியுள்ளது. இதே போல் 100க்கு மேற்பட்ட அப்ரூவல்கள் ரூபி பில்டர்ஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்த முறைகேடான அப்ரூவல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது.

 பொதுப்பணித்துறையின் நீர் பாசனப்பிரிவு அதிகாரிகள் சம்பளம் வாங்குவது தமிழக அரசிடமா? ரூபி பில்டர்ஸ் நிறுவனத்திடமா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்..

 ஏரி ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்பை அகற்றவில்லை..

 ரூபி பில்டர்ஸ் உரிமையாளர் மனோகரன், நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டால், நாங்குநேரி தொகுதியில் ஏரி,குளம், குட்டை, சுடுகாடு எல்லாம் அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிடும்..

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *