
திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் மீது காரைக்குடி நகராட்சியில் பணியாற்றிய போது விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக முடியரசன் சாலையில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு பணி என்ற பெயரில் செந்தில்குமார் பெயரில் போலி பில் போட்டு ரூ8,90,000 முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆணையராக பணியாற்றிய என்.ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளராக பணியாற்றிய எஸ்.மணி, நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றிய கே.மாலதி மற்றும் செந்தில்குமார் நான்கு பேர் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது(05/2018 தேதி 25.6.18).


ஊழல் வழக்கில் காரைக்குடி நகராட்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை வளையத்தில் இருக்கும் என்.ரவிச்சந்திரன் திருச்சி மாநகராட்சி ஆணையராக தொடருவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாம்பரம் நகராட்சியில் ஆணையராக ரவிச்சந்திரன் பணியாற்றிய போது, சிம்லா சரவணன் என்பவரை வைத்துக்கொண்டு போட்ட ஆட்டம் எல்லை மீறி போனது. செம்பாக்கம் நகராட்சி ஆணையர் பதவியையும் கூடுதலாக ரவிச்சந்திரன் பார்த்த போது, சேலையூர் ஏரியை ஆக்ரமித்து, அடுக்குமாடி கட்டிடம் கட்ட ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு அப்ருவல் வழங்கினார்.
தாம்பரம் நகராட்சியில் ஆணையராக இருந்த ரவிச்சந்திரனை அன்பாக போலி பில் ஆணையர் ரவிச்சந்திரன் என்றுதான் அன்பாக அழைப்பார்கள்..
கடந்த மூன்றாண்டுகளாக திருச்சி மாநகராட்சியை ஊழல் மாநகராட்சியாக மாற்றிய ஆணையர் ரவிச்சந்திரனுக்கு ஊழல் சக்கரவர்த்தி என்ற பட்டமே வழங்கலாம். ஆனால் ஊழல் சக்கரவர்த்தி ரவிச்சந்திரனுக்கு திருச்சி மாவட்ட திமுகவும் ஆதரவாக செயல்படுவதால், திருச்சி மாநகராட்சியின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை.
காரைக்குடி நகராட்சியில் அரசுக்கு ரூ8.80 இலட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகும், திருச்சி மாநகராட்சி ஆணையராக ரவிச்சந்திரன் பணியாற்றுவது எப்படி?
ரவிச்சந்திரனை தற்காலிக பணி நீக்கம் செய்து இருக்க வேண்டும். ஆனால் நகராட்சி நிர்வாக ஆணையரகம் ரவிச்சந்திரனை தற்காலிக பணி நீக்கம் செய்யாமல், அதிகாரமையத்தில் வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது..
மக்கள்செய்திமையம் மக்களுக்காக