Breaking News
Home / பிற செய்திகள் / கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு கேள்விகள்… சரவணா செல்வரத்னத்தின் 9மாடி வணிக வளாகம் விதிமுறைகளை மீறி அனுமதி- Revised Plan பெயரில் ஊழல் கூத்து..

கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு கேள்விகள்… சரவணா செல்வரத்னத்தின் 9மாடி வணிக வளாகம் விதிமுறைகளை மீறி அனுமதி- Revised Plan பெயரில் ஊழல் கூத்து..

சென்னை அருகில் பல்லவபுரம் அருகில் உள்ள ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்குகள் வணிக கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 21.8.2019ல்(கடிதம் எண்.C3(S)/12059/2018 Dated 21.8.2019) அனுமதி அளித்துள்ளது.

 தரைத்தளத்துக்கு கீழ் இரண்டு தளம் பார்க்கிங், தரைத்தளம்  முதல் 5வதுதளம் வரை துணிக்கடை, 6வது மற்றும் 7வது தளத்தில் திரையரங்குகள், 8வது தளம், 9வதுதளம் அலுவலகம் இப்படி 9மாடி வணிக வளாகம் கட்ட சரவணா செல்வரத்னத்துக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 நமக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் இங்கு கேள்விகளாக…

  1. 23.7.19ம் கொடுக்கப்பட்ட Revised Plan பேரில் பொதுப்பணித்துறை, தாம்பரம் வட்டாட்சியர், நெஞ்சாலைத்துறை, சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு, சுற்றுச் சூழல்  மற்றும் பல்லவபுரம் நகராட்சி ஆகிய துறைகளில் என்.ஒ.சி பெற வேண்டும். ஆனால் 20.3.2019, 22.3.2019&27.3.2019, 4.4.2019 ஆகிய தேதிகளில் முன் கூட்டியே என்.ஒ.சி பெறப்பட்டதன் அடிப்படையில் 23.7.19ல் கொடுக்கப்பட்ட  Revised Plan பேரில் எப்படி சரவணா செல்வரத்னம் 9 மாடி கட்ட அனுமதி அளிக்கப்பட்டது?
  2. ஜமீன் பல்லவபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டாட்சியர் லிமிட்டில் உள்ள ஊர். ஜமீன் பல்லவபுரத்தில் சரவணா செல்வரத்னம் வணிக வளாகத்தில் பிளானில் உள்ளபடி அமைக்கப்படும்  திரையரங்களுக்கு FORM – Bல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் என்.ஒ.சி பெறவில்லையே ஏன்?
  3.  பல்லவபுரம் நகராட்சி ந.க.எண்.6560/2019/F1ன் படி 4.4.19ல் என்.ஒ.சி வழங்கியுள்ளது. ஆனால்  21.5.19, 1.7.19, 23.7.19 ஆகிய நாட்களில் கட்டுமான பணியின் பிளானை மாற்றி சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் கடிதம் கொடுத்துள்ளது. 23.7.19ம் தேதி சரவணா செல்வரத்னம் கொடுத்த Revised Plan இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 23.7.19க்கு பல்லவபுரம் நகராட்சியிடமிருந்து என்.ஒ.சி ஏன் பெறவில்லை.
  4.  சரவணா செல்வரத்னம் திரையரங்களுடன் கூடிய வணிக வளாக கட்டிடத்தின் இறுதி செய்யப்படாத பிளானுக்கு பல்லவபுரம் நகராட்சி நிர்வாகம் என்.ஒ.சி கொடுத்த பின்னணியில் பல கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது உண்மையா? (BOLD)
  5.  IAFயிடமிருந்து என்.ஒ.சி 1.11.2018ல் பெறப்பட்டுள்ளது. IAFஎன்.ஒ.சி பெறப்பட்டு 290நாட்கள் கழித்து சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 9மாடி கட்டிடம் கட்ட  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. IAFயிடமிருந்து   Revised Planபடி(23.7.19) 9வது மாடியில் உள்ள கட்டிடங்களின் அமைவது தொடர்பாக, 23.7.19க்கு பிறகு என்.ஒ.சி பெறவில்லை ஏன்?

இப்படி சரவணா செல்வரத்னத்தின் திரையரங்களுடன் கூடிய 9மாடி வணிக வளாகத்துக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

   சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் –செயலர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அய்யா நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அய்யா அளிக்கும் பதிலையும் வெளியிட தயாராக உள்ளோம்..

                              மக்கள்செய்திமையம் மக்களுக்காக

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *