Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை – ஜமீன் பல்லவபுரம்.. துணிக்கடை + திரையரங்கம்- சரவணா செல்வரத்னத்தின் 9மாடி- விதிமுறைகளை மீறி அனுமதியா?

சென்னை – ஜமீன் பல்லவபுரம்.. துணிக்கடை + திரையரங்கம்- சரவணா செல்வரத்னத்தின் 9மாடி- விதிமுறைகளை மீறி அனுமதியா?

சென்னை அருகில் பல்லவபுரம் அருகில் உள்ள ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்த்துடன் வணிக வளாகம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் அனுமதி அளித்துள்ளது.

 தரைத்தளத்துக்கு கீழ் இரண்டு தளம் பார்க்கிங், தரைத்தளம்  முதல் 5வதுதளம் வரை துணிக்கடை, 6வது மற்றும் 7வது தளத்தில் திரையரங்குகள், 8வது தளம், 9வதுதளம் அலுவலகம் இப்படி 9மாடி வணிக வளாகம் கட்ட சரவணா செல்வரத்னத்துக்கு விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

      பொதுப்பணித்துறை, தாம்பரம் வட்டாட்சியர், நெஞ்சாலைத்துறை, சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய துறைகளில் என்.ஒ.சி கொடுத்த பிறகு சரவணா செல்வரத்னம் கட்டுமான பணியின் பிளானை மூன்று முறை மாற்றியுள்ளது

           பல்லவபுரம் நகராட்சி ந.க.எண்.6560/2019/F1ன் படி 4.4.19ல் என்.ஒ.சி வழங்கியுள்ளது. ஆனால்  21.5.19, 1.7.19, 23.7.19 ஆகிய நாட்களில் கட்டுமான பணியின் பிளானை மாற்றி சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் கடிதம் கொடுத்துள்ளது. 23.7.19ம் தேதி சரவணா செல்வரத்னம் கொடுத்த  கடிதத்தின்படி பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது.

 வணிக வளாக கட்டிடத்தின் இறுதி செய்யப்படாத பிளானுக்கு பல்லவபுரம் நகராட்சி எப்படி என்.ஒ.சி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.. பணம் பத்தும் செய்யும் சார் என்று பல்லவரபுரம் நகராட்சியில் பணியாற்றும் அப்பாவி அதிகாரிகள் புலம்புகிறார்கள்..

   IAFயிடமிருந்து என்.ஒ.சி 1.11.2018ல் பெறப்பட்டுள்ளது. மற்ற எந்த துறையும் அனுமதி கொடுக்காத நிலையில் IAF எப்படி என்.ஒ.சி கொடுத்தது?

 இப்படி சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமமும், பல்லவபுரம் நகராட்சியும் விதிமுறைகளை மீறி சரவணா செல்வரத்னம் துணைக்கடை + திரையரங்கத்தின் வணிக வளாகத்துக்கு அனுமதி கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *