
செம்பரம்பாக்கம் ஏரியின் 6வது மதகு, 7வது மதகு உள்ளிட்ட நான்கு மதகுகளின் நீர் வழிப்பாதைகள் முழுவதும் அதாவது 12 கிமீட்டர் தூரத்துக்கு ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் போரூர் ஏரிக்கு செல்லும் 6,7வது மதகுகளின் நீர் வழிப்பாதைகள் பூந்தமல்லி ஜி.எஸ்.டி சாலை, பூந்தமல்லியின் ஊரின் சில பகுதிகள் அதாவது 8கிமீட்டர் ஆக்ரமிக்கப்பட்டு, கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளது. இதனால் போரூர் ஏரிக்கு செம்பரம்பாக்கம் உபரி நீர் செல்லவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வழிப்பாதைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதை 11.3.88ல் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகள் உறுதி செய்து, ஆக்ரமிக்கப்பட்ட பூந்தமல்லி பகுதியின் அ பதிவேட்டின் நகலை வெளியிட்டுள்ளார்கள்.
2015ம் ஆண்டு கன மழையின் போது, செம்பரம்பாக்கம் ஏரி முன் அறிவிப்பு செய்யாமல் திறந்துவிடப்பட்டதால் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கி போனது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரி ஆக்ரமிப்பை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்தார்கள். ஆனால் ஆக்ரமிப்பை அகற்ற முடிவு எடுக்கவில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் செம்பரம்பாக்கம் ஏரி ஆக்ரமிப்பை அகற்றினால் மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை நீர் தேக்க முடியும். உபரி நீர் போரூர் ஏரிக்கு செல்லும்..
மக்கள்செய்திமையம் மக்களுக்காக