
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்தும் பணியை பூமி பூஜையுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனம் 3800 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியை 8ஆண்டுகளில் ஒரு மீட்டர் அதாவது 3 அடிக்கு ஆழப்படுத்தி 25இலட்சம் லாரி மணல் லோடுகளை எடுத்து விற்பனை செய்து, தமிழக அரசுக்கு ரூ191.27கோடி கொடுக்குமாம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு சில கேள்விகள்..

- 11.9.19 தேதி பூமி பூஜையை தொடங்கி வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளது. துவைக்கி வைத்தார்..கொசள்தடையாறு—கொடிசைத்து..151.80இலட்சம் கண் மீட்டர்… தமிழ்நாட்டில் இந்த நிலைமையா?
- தனியார் நிறுவனம் யார்.. அந்த தனியார் நிறுவனம் எப்படி தேர்வு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் தேர்வு செய்ய டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தின் படி டெண்டர் கோரப்பட்டதா?
- 25இலட்சம் லாரி மணல் லோடுகளை எடுத்து விற்று அரசுக்கு ரூ191.27கோடி தனியார் நிறுவனம் கொடுக்கும்.. ஆனால் ஏரியின் கரைகளை பலப்படுத்த இந்த மணல் பயன்படுத்தப்படுமா?
- 2011ம் ஆண்டு நேமம் ஏரி கொள்ளவு ரூ55 கோடியில் உயர்த்தப்பட்ட போது, நேமம் ஏரியின் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு போவதால்,செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்புக்காக ரூ16.50 கோடி செலவிடப்பட்டது. இந்த பணிகள் 2014ல் தான் நடந்தது. 5ஆண்டுகளில் புனரமைக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி,எப்படி முடங்கி போனது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் ஒரு பகுதி ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்ரமிப்புகள் அகற்றுப்படுமா?
- செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மணலை எடுத்து செல்ல, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி அளித்துள்ளதா.. 25இலட்சம் லாரி மணல் லோடு என்பதை கணக்கீடுவது எப்படி?
இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் நடக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்.
மக்கள்செய்திமையம் மக்களுக்காக