
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அறந்தாங்கி அருகே உள்ள வெளியாத்தூர் கிராமத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தனியார், அரசு மருத்துவமனை டாக்டர்கள் டெங்கு காய்ச்சலா, மர்ம காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல்தான் என்று தொடர் சிகிச்சை கொடுக்காமல், பாதிக்கப்பட்ட கிராம மக்களை டிஸ்ஜார்ஜ் செய்து அனுப்பிவிடுகிறார்.
வெளியாத்தூர் கிராமத்தில் எந்த பக்கம் திரும்பினாலும், மழை நீர், கழிவு நீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பு கொசுப்பண்ணையாக காட்சியளிக்கிறது. ஊரின் மையப்பகுதியில் உள்ள குளம், குப்பை குளமாக மாறி வெளியாத்தூர் முதல் அறந்தாங்கி வரை கொசு சப்ளை செய்கிறது.
பாதிக்கப்பட்ட வெளியாத்தூர் மக்கள் தங்களுக்கு மர்ம காய்ச்சலா… டெங்கு காய்ச்சலா என்று தெரியாமல் ஊரையே காலி செய்து வருகிறார். ஒரு சில வீடுகளை தவிர மற்ற வீடுகள் பூட்டி கிடக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமே மர்ம காய்ச்சல்/டெங்கு காய்ச்சலில் சிக்கி தவிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேரமே இல்லை. 24மணி நேரமும் பணக்காரர்களுடன் மட்டும் வலம் வருகிறார். அதிமுகவுக்கு வாக்களித்த ஏழை மக்கள் கொசுக்களுடன் போரட்டம் நடத்திவருகிறார்கள்.
காதாரத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் மர்ம காய்ச்சலால் /டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளியாத்தூர் கிராம மக்களை கண்டுகொள்ளவில்லை.
மக்கள்செய்திமையம் மக்களுக்காக