
சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து திட்டமிடல் துறை சென்னை மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தி வருகிறது. சி.சி.டி.வி கேமிரா புட்டேஜ் மூலம் பல குற்றவாளிகள் சிக்கியுள்ளார்கள். சென்னை மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமிரா பொருத்த எடுத்த முயற்சிக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களை பாராட்டுகிறோம்.
ஆனால் சி.சி.டி.வி கேமிரா என்ன விலை என்பதில் நமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி போக்குவரத்து திட்டமிடல் பொதுத் தகவல் அலுவலர் அனுப்பிய தகவல்..

- LINKS SYSTEMS LTD CHENNAI – 20 CCTV Installed – Rs 2,19,70,384/-(ரூ2.19கோடி)- ஒரு சி.சி.டி.வி கேமிரா விலை ரூ10.98 இலட்சம்..
- LOOKMAN ELECTROPLAST INDUSTRIES CHENNAI – 40 CCTV Installed –Rs 2,99,78,600/-(ரூ2.99கோடி) – ஒரு சி.சி.டி.வி கேமிரா விலை ரூ 7.49இலட்சம்.
- SKANDA TELECOM CHENNAI – 12 CCTV Installed – Rs 42,99,200/-(ரூ42.99 இலட்சம்)- ஒரு சி.சி.டி.வி கேமிரா விலை ரூ 3.58 இலட்சம்.
- KERALA STATE ELECTRONICS DEVELOPMENT CORPORATION LTD CHENNAI – 26 CCTV Installed – Rs 2,87,69,699/-(ரூ2.87கோடி)- ஒரு சி.சி.டி.வி கேமிரா விலை ரூ11.06 இலட்சம்..
- ஹோண்டாய் கார் நிறுவனம் 5 சி.சி.டி.வி கேமிரா நன்கொடையாக கொடுத்துள்ளது.
சி.சி.டி.வி கேமிரா விலையை பார்த்து உண்மையில் அதிர்ச்சியாகிவிட்டோம்..உண்மையில் ஒரு சி.சி.டி.வி கேமிரா விலை அல்லது ஒரு சி.சி.டி.வி பொருத்த இலட்சக்கணக்கில் செலவாகுமா.. ஒண்ணுமே புரியவில்லை…
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தவறான புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..
குற்றங்கள் குறைய, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க, சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டதில் நமக்கு மகிழ்ச்சியே..