Breaking News
Home / பிற செய்திகள் / அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு 11 கேள்விகள் – பதில் அளிப்பாரா- Kancheepuram collector 11 Questions..

அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு 11 கேள்விகள் – பதில் அளிப்பாரா- Kancheepuram collector 11 Questions..

அத்திவரதர் வைபவத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்த கொள்ள  மூத்த பத்திரிகையாளராகிய நான் நேற்று 11.8.2019ல் காஞ்சிபுரம் சென்றேன்.  தரிசனம் செய்ய இல்லை. என்ன நடக்கிறது என்று பத்திரிகையாளராக ஆய்வு செய்தேன். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சந்தித்த அவலங்களை பார்த்த போது, மாவட்ட நிர்வாக என்று ஒன்று செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தின் அனுபவங்களை11  கேள்விகளாக வைத்துள்ளேன்.ஆனால் 100 கேள்விகள் கேட்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யா பதில் சொல்லுவாரா..

 1. காஞ்சிபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து அத்திவரதர் இருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல வாடகை இரு சக்கரவாகனத்தில் செல்ல ரூ150/- ஆட்டோவில் செல்ல  ஒருவர் முதல் ஐந்து பேருக்கு ரூ400 முதல் ரூ600வரை..கார் பாஸ் இருந்தா மட்டுமே கோயில் வரை செல்ல முடியும். இதே போல் கோயிலிருந்து பேரூந்து நிலையத்துக்கு திரும்ப பணம் செலவு செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழத்தின் மினி பஸ்  கண்ணில் தென்படவே இல்லை. வாடகை ஏன் மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கவில்லை.
 2. பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், நடமாடு நகைக்கடை போல் நகைகளை அணிந்துக்கொண்டு, வி.வி.ஐ.பி பாஸில் எப்படி அனுமதிக்கப்பட்டார்.
 3. வி.வி.ஐ.பி, வி.ஐ.பி பாஸ்களை பாபுஷா, பிரகாஷ் சில்க், பச்சையப்பா சிலக், வரமகாலட்சுமி சில்க் இவர்கள் மூலம் விநியோகம் செய்ய, யார் அனுமதி வழங்கியது. இவர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பிரதிநிதிகளா?
 4. திருவாலாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்யை, நீங்கள் ஆவேசமாக திட்டியது சரியா.. நீங்கள் திட்டும் வீடியோ வெளியானது எப்படி, அதே போல் நீங்கள் உங்கள் குடும்பத்தை அலைத்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் காவலர்கள் டோனர் பாஸை கிழிக்காமல் அனுப்புவது போல், டோனர் பாஸை கிழியுங்கள் என்று சத்தம் போடும் வீடியோ என வீடியோக்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இதை பார்க்கும் போது மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கு மோதல் இருப்பது உறுதியாகிறது. வீடியோ அறிக்கை போர் நடத்துவதை முதலில் நிறுத்துங்கள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா மக்களே பார்க்காத NEWS J க்கு மட்டும் பேட்டி அளித்த மர்மம் என்ன?
 5. இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பாஸ் கிடைக்காமல் 22 பேருடன் காத்திருந்தார். அதே நேரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் வந்த போது, வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம் இருவரும் 100க்கு மேற்பட்ட வி.வி.ஐ.பி பாஸ்கள் வைத்திருந்தார்கள். அமைச்சர் குடும்பத்தினர்அத்திவரதரை பார்க்க இருவரும் வி.வி.ஐ.பி பாதையில் 15 பேரை அழைத்து சென்றார்கள். சில நிமிடங்களில் அத்திவரதருடன் ஷெல்பி எடுத்துக்கொண்டு, தரிசனம் செய்துவிட்டு, அர்ச்சகர் அனைவருக்கும் தலா ரூ1000/- கொடுத்துவிட்டு திரும்பினார். வாலாஜாபாத் கணேசன் வி.வி.ஐ.பி பாஸ் புரோக்கரா?
 6. அத்திவரதரை தரிசிக்கும் போதும் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது யார்?
 7. தற்காலிக டாய்லட்டுக்குள் நுழைய முடியவில்லை. ஒரே துர்நாற்றம். நாகரீகம் கருதி புகைப்படத்தை வெளியிடவில்லை. அடிப்படை வசதிகளே மிகவும் மோசம் ஏன்?
 8. அத்திவரதர் தரிசனம் செய்யும் இடங்களில், மக்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் அறநிலையத்துறை உண்டியல் அதிகமாக இல்லை. இதனால் பக்தர்கள் உண்டியலில் பணம் போட முடியாமல், அர்ச்சகர் தட்டில் ரூ500, ரூ1000, ரூ2000 என போடுகிறார்கள். இதனால் அர்ச்சகர்கள் காட்டில் பண மழை பெய்கிறது.. உண்டியல் அதிகமாக வைக்கப்படாத பின்னணி என்ன?
 9. நமக்கு தெரிந்த ஒரு அதிகாரி கீரின் கார்டு வி.வி.ஐ.பி பாஸ் ரூ5000/- என 50 பாஸ் நம் கண் முன்னால் ஒரு புரோக்கரிடம் ரூ2,50,000 கொடுத்து விலைக்கு வாங்கினார்.
 10. அர்த்தவரதரை பொது தரிசனத்தில் பல மணி நேரம் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் நின்று, தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பிறகு, பக்தர்கள் சொல்லும் ஒரே வார்த்தை உயிர் பிழைத்துவிட்டோம் என்ற வார்த்தைதான்..
 11. ஆகஸ்டு 17ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகளுக்கு 20.8.19 வரை டூட்டி போடப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுகிறதா?

     ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்டு 17ம் தேதி அத்திவரதர் வைபவத்தில் நடந்தவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெளியிடாவிட்டால் மக்கள்செய்திமையம் வெள்ளை அறிக்கை வெளியிடும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *