Breaking News
Home / பிற செய்திகள் / அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ்யின் அதிகார- ஆதிக்க மீறல்…

அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ்யின் அதிகார- ஆதிக்க மீறல்…

செயல்பாடுகளை பார்க்கும் போது, துக்ளக் தர்பார் நிர்வாகம் தான் நினைவுக்கு வருகிறது. வி.வி.ஐ.பி, வி.ஐ.பி பாஸ்கள் பட்டு சேலை கடை புகழ் பாபு ஷா, பச்சயப்பா சில்க் உள்ளிட்ட பட்டுசேலை வியாபாரம் செய்யும் கடைகளில் குவிந்து கிடக்கிறது எப்படி…

 பிரபலமான ரவுடி  வரிச்சூர் செல்வம், நடமாடும் நகைக்கடை போல் நகைகள் அணிந்துக்கொண்டு வி.வி.ஐ.பி பாஸில் அத்திவரதரை பார்த்து தரிசனம் செய்து எப்படி? பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், வி.வி.ஐ.பி பாஸில் தரிசனம் செய்யலாம், ஆனால்  வி.வி.ஐ.பி பகுதி வழியாக வயதான சில பொது மக்களை தரிசனம் செய்ய பாதுகாப்பு பணியில் இருந்த திருவாலாங்காடு காவல் நிலைய   அய்வாளர் ரமேஷ் ஆய்வாளர் அனுப்பியது தவறா.. ஆய்வாளர் ரமேஷ் மணல் மாபியா கும்பல் சிலரையும் வி.வி.ஐ.பி பகுதி வழியாக அனுப்பியதாகவும் தெரிகிறது. வி.வி.ஐ.பிபகுதி வழியாக பொது மக்கள் செல்லலாமா என்று கொதித்து எழுந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ், அந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ்யை தரக்குறைவாக திட்டி, தள்ளி விடுகிறார்கள். செல்போனில் யாருக்கோ போன் செய்வது போல் நடிக்கிறார்.  ஐ.ஜி கூப்பிடுங்க..இவனை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஆவேசமாக  பேசி செயல்பட்டது ஏன்..  அப்படி ..யார்.. வி.வி.ஐ.பி வருவது தடைப்பட்டது.. மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையாவின் செயல்பாடுகல் அதிகார ஆதிக்கத்தின் அத்து மீறலாக தெரிகிறது..

   அத்திவரதர் தரிசனத்தில் பொது மக்களுடன் வி.வி.ஐ.பிக்களும் வரிசையில் பல  நேரம் காத்திருந்தால் தான்  அத்திவரதர் புண்ணியம் கிடைக்கும்.

   அத்திவரதர் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த, உண்டியல் எல்லா இடங்களிலும் வைத்திருந்தால், பல கோடி உண்டியல் மூலம் அரசுக்கு வருமானமாக  கிடைத்திருக்கும். மக்கள் வரிசையில் நிற்கும், மக்கள் நடமாடும் இடங்களில் உண்டியல் இல்லாத காரணத்தால், மக்கள் அர்ச்சர்களின் தட்டில் காணிக்கை செலுத்தினார்கள். இதனால் பல கோடி அரசுக்கு வருமான இழப்பு எற்பட்டுள்ளது.

  மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் உண்டியல் வைப்பதில் அலட்சியமாக இருந்த காரணத்தால், பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்றதால் உண்டியலை தேடி அலைய முடியாமல், அத்திவரதர் அருகில் இருக்கும் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு பல லட்சம் காணிக்கையாக கொடுத்தார்கள். பூஜை தட்டில் போடும் பணம், பூஜை செய்யும் அர்ச்சகர்களிடம் கொடுக்கும் பணம் அத்திவரதர் கணக்கில் சேராது என்று அத்திவரதரை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தெரியவில்லை..          

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *