Breaking News
Home / பிற செய்திகள் / வேலூர் மக்களவை தேர்தல்- திமுகவை வெற்றி பெற வைத்த அமித்ஷா… அதிமுக வாக்கு வங்கி சரிந்தது- Vellore election -ADMK vote bank collapsed..

வேலூர் மக்களவை தேர்தல்- திமுகவை வெற்றி பெற வைத்த அமித்ஷா… அதிமுக வாக்கு வங்கி சரிந்தது- Vellore election -ADMK vote bank collapsed..

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும், அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே வாக்கு எண்ணிக்கையில் இழுபறிக்கு பின் 8142 வாக்கு வித்தியாசத்தின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்து வெற்றி பெற்றார்.

  வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு பதிவு நாளென்று அதாவது ஆகஸ்டு 5ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 பிரிவு நீக்க தீர்மானத்தையும் கொண்டு வந்தார். இதன் எதிரொலியாக வேலூர் மக்களவைத் தேர்தலில் தமிழக அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில்  முஸ்லீம் சமுகத்தினர் ஒரு பகுதியினர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்துக்கு வாக்களிக்க  தாங்கள் எடுத்த  முடிவை மாற்றி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வாக்களித்தார்கள்.

 உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதாவை ஆகஸ்டு 6ம் தேதி தாக்கல் செய்திருந்தால், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தோல்வியடைந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 கதிர் ஆனந்தின் தந்தையும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகன், 1996 ஆண்டு முதல் முதலியார் சமூகத்துக்கு எதிராக செயல்பட்டார். திமுகவில் இருந்த  முதலியார் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஒரங்கட்டப்பட்டார்கள். முதலியார் சமூகத்தை சேர்ந்த திமுகவினருக்கு கட்சி பதவி கிடைக்காமல் செய்தார் துரைமுருகன்.

 அதனால் கதிர் ஆனந்துக்கு முதலியார் வாக்குகள் முழுவதும் கிடைக்கவில்லை.  துரைமுருகன் எதிர்பார்த்த வன்னியர் வாக்குகளும் கதிர் ஆனந்துக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

  1. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமான் 3,60,474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வாசு 2,53,081 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராஜேந்திரன் 11,184 வாக்குகளும், விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஷெரிப் 62,696 வாக்குகளும் பெற்றார்கள்.
  2. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமான் 2,05896 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன்3,83,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதலியார் வாக்குகளை நம்பி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.  இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக விஜய் இளஞ்செழியன் 21,650 வாக்குகள் பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் துரைமுருகன் தன் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால், அப்துல்ரகுமானுக்கு தோற்கடிக்க, ஏ.சி சண்முகத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் 2009 தேர்தலில் அப்துல்ரகுமான் பெற்ற 3,60, 474 வாக்குகள் கூட 2014 மக்களவைத் தேர்தலில் பெற முடியவில்லை. அப்துல்ரகுமானுக்கு கிடைக்க வேண்டிய 1,55,000 வாக்குகள் துரைமுருகன் ஆதரவால், ஏ.சி சண்முகத்துக்கு கிடைத்தது என்பதுதான் உண்மை.
  3. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு 4,77,199 வாக்குகளும் கிடைத்தது. 8142 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி சரிந்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு 3,24,326+3,83,719=7,08,045 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 4,77,199 மட்டுமே. 2,30,846 வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்ததுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

   திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வெற்றி பெற வைத்த அமைச்சர் அமித்ஷாவுக்குதான் முதலில் திமுக நன்றி சொல்ல வேண்டும்..                                           தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *