Breaking News
Home / பிற செய்திகள் / அத்திவரதர் வைபவம்.. மாவட்ட நிர்வாகத்தின் துக்ளக் தர்பார்..

அத்திவரதர் வைபவம்.. மாவட்ட நிர்வாகத்தின் துக்ளக் தர்பார்..

அத்திவரதர் தரிசனம் செய்ய, இலட்சக்கணக்கில் பக்தர்கள் 24 மணி நேரமும் குவிகிறார்கள்.   தினமும் 21 மணி நேரம் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் பேட்டியளிக்கிறார். ஆனால்  அத்திவரதர் தரிசனம் செய்வதை நிர்வாகம் காரணம் என்று கூறி பல மணி நேரம் மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்கிறது.

  7.8.19ம் தேதி இரவு நள்ளிரவு 1.30மணிக்கு அத்திவரதர் தரிசன நடை சாத்தப்பட்டது. 8.8.19ம் தேதி காலை 12.30மணி வரை பொதுமக்களுக்கான தரிசனம் துவங்கவில்லை. ஆனால் வி.ஐ.பிக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

    அத்திவரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கும் முன்பு மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் இணைந்து ஆலோசனை செய்து, தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வரிசையில் பாதுகாப்பாக நிற்க கட்டமைப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும். அத்திவரதர் வைபவம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் பக்தர்கள் வரிசையில் நிற்க, இரும்பு கம்பினால் பாதை அமைக்க வெல்டிங் பணிகள் நடக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் மிகவும் தாமதமான செயல்பாடுகளை பார்க்கும் போது துக்ளக் தர்பார் நிர்வாகம்தான் நினைவுக்கு வருகிறது.

 சென்னையில் இருந்து தரிசனம் செய்ய வந்த ராம்குமார் நம்மிடம், இரண்டு நாளைக்கு முன்பு வந்தோம் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் திரும்பி போய்விட்டோம். இன்று(8.8.19) டோனர் பாஸ் கிடைத்த காரணத்தால்  காலையிலேயே வந்தோம், வெல்டிங் பணிகள் நடப்பதால், தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. அன்னதானம் போடுகிறதா சொன்னாங்க, ஆனால் அங்கு சென்றால் அன்னதானம் முடிந்துவிட்டது கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்திருக்கிறார்களாம். ஆனால் சரிந்து விழுந்து, பக்தர்கள் காயமடைந்த காரணத்தால், இப்ப வெல்டிங் பணி செய்கிறார்கள்  என்று புலம்பினார். பக்தர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளை  கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் தான் நாம் துக்ளக் தர்பார் நிர்வாகம் என்று  விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

 வி.வி.ஐ.பிக்கள்  சில நிமிடங்களில் அத்திவரதர் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறார்கள். 8.8.19 அன்று  மதியம் 1மணி வரை வரிசையில் காத்துகிடக்கும் மக்களை தரிசனம் செய்யவிடவில்லை. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் வந்து தரிசனம் செய்தார்கள்.

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக் உள்ளிட்ட பல வி.வி.ஐ.பிக்கள் பாதுகாப்புடன் சில நிமிடங்களில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவதை பார்த்து வரிசையில் நிற்கும் பக்தர்கள் புலம்புகிறார்கள்.

 அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், நாங்கள் தரிசனம் செய்ய பாஸ் வழங்க மாவட்ட நிர்வாகம்மறுக்கிறது என்று முணு முணுக்கிறார்கள்..

 மாவட்ட நிர்வாகத்தை விமர்சனம் செய்வது நம்முடைய நோக்கமல்ல. பொது தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும்  இலட்சக்கணக்கான பக்தர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், குடிக்க தண்ணீர் கூட கிடைக்கமால் படும் அவதியை பார்க்கும் போது, பத்திரிகையாளர் என்ற முறையில் வரும் நியாயமான கோபம்தான்..

 மாவட்ட நிர்வாகம் என்பது அத்திவரதர் தரிசனத்துக்காக மட்டுமல்ல. ஜூலை1ம் தேதி முடங்கி போன மாவட்ட நிர்வாகத்தின் பணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எப்படி, என்ன பதில் சொல்லுவார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *