Breaking News
Home / பிற செய்திகள் / அத்திவரதர் வைபவம் டோனர் – விஐபி பாஸில் முறைகேடு காஞ்சிபுரம் நகராட்சியில் பல லட்சம் போலி பில்- முடங்கி போன மாவட்ட நிர்வாகம் …

அத்திவரதர் வைபவம் டோனர் – விஐபி பாஸில் முறைகேடு காஞ்சிபுரம் நகராட்சியில் பல லட்சம் போலி பில்- முடங்கி போன மாவட்ட நிர்வாகம் …

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம், ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்டு 17ம் தேதி நடக்கிறது. தினமும் இலட்சக்கணக்கில் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருகிறார். ஆனால் இலட்சக்கணக்கில் குவியும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை.

   அத்திவரதர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய  காஞ்சிபுரம் நகராட்சியில் ஆணையர் பதவியே காலியாக உள்ளது.

  டோனர், விஐபி பாஸ் என்ற பெயரில் மெகா மோசடி நடந்துவருகிறது. டோனர் பாஸ், விஐபி பாஸ்  வெளியில் விற்பனை செய்யப்படுகிறது. டோனர் பாஸில் பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதர் அருகில் உட்கார்ந்து தரிசனம் செய்தார்.  தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில்  பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்  மட்டும் பாதுகாப்புடன் 10 நிமிடங்களில் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறார்கள்..

    டோனர் பாஸ், விஐபி பாஸ் முறைகேடுகள் மற்றும் காஞ்சிபுரம் நகராட்சியில் அத்திவரதர் வைபவத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, பல லட்சம் செலவு செய்ததாக  போடப்பட்ட போலி பில் தொடர்பாக ஆதாரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

    ஜூலை 25ம் தேதி பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் சத்யபிரகாஷ், அத்திவரதரை தரிசிக்க வந்த போது,  கூட்ட நெரிசலில் 25 பேர் மயக்கமடைந்தார்கள். கூட்ட நெரிசலில்  வயதானவர்கள் பலியானார்கள். பொள்ளாச்சியிலிருந்து இலவச தரிசனத்திற்காக கிழக்கு கோபுரம் வரிசையில் நின்றுக்கொண்டு இருந்த இலட்சுமணன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆக்ஸ்டு 7ம் தேதி மலை  திடீரென மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்தது. அந்த நேரத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்த சுமார் 25 பேர், மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனர். ஆனால் கூட்ட நெரிசலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயமடைந்தவர்கள் என்ற விவரங்களை மாவட்ட நிர்வாக வெளியிட மறுக்கிறது..

 அத்திவரதர் வைபவத்தால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் முடங்கி போய்விட்டது.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அத்திவரதர் வைபவம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

 மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு வேண்டுகோள்.. அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுங்கள்..முக்கிய பிரமுகர்களை மட்டும் கவனிப்பதில் கவனம் செலுத்துவதைவிட  இலட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *