Breaking News
Home / பிற செய்திகள் / தமிழ்நாடு மின்சார வாரியம்.. ஆண்டுக்கு ரூ37000 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்- TNEB POWER PURCHASE Rs37,000cr per year.

தமிழ்நாடு மின்சார வாரியம்.. ஆண்டுக்கு ரூ37000 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்- TNEB POWER PURCHASE Rs37,000cr per year.

தமிழகத்தில் மின் வெட்டு கிடையாது.  மின்சாரம் பற்றாக்குறையும் இல்லை. தமிழ்நாடு மின்சாரவாரியம் உபரியாக உள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அய்யா அவர்கள்  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி வருகிறார்.

 2017-18ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சாரவாரியம் ரூ37,339.71கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.

  1. Central Generation Station – 30,986 MU – ரூ 12,480.02கோடி
  2. Independent Power(IPP) – 1762 MU – ரூ776.95கோடி
  3. Traders(LTOA, MTOA & STOA & SWAP) & Exchanges – 22542 MU – ரூ10,269கோடி
  4. Others – 23343 MU – ரூ13,813 கோடி

ஆக மொத்தம் 78,633 மில்லியன் யூனிட் மின்சாரம் ரூ37,339.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

            5.8.19ம் தேதி நிலவரம்.. தமிழ்நாட்டுக்கு  தினமும் தேவையான மின்சாரம் – 12,660 மெகா வாட்  ஆனால் தமிழ்நாட்டில் தினமும்  உற்பத்தி செய்யும் மின்சாரம் 5160 மெகா வாட்..  தினமும் 7500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் சராசரி 7500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரம் வாரியம், என்ற உண்மையை  மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் வெளியிட மறுப்பது ஏன்?

ஆனால்  தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அய்யா உபரி மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறுவது உண்மை என்றால், ஆண்டுக்கு ரூ37,339.71 கோடிக்கு ஏன் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும்.. MERITINDIA .INல் 5.8.19ல் 7500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று வெளியிட்டு உள்ளது.. எப்படி.. தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் என்ன நடக்கிறது..ஒண்ணுமே புரியவில்லை.

   தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *