Breaking News
Home / பிற செய்திகள் / பூந்தமல்லி நகராட்சி OURLAND ENGINEERING பெயரில் கோடிக்கணக்கில் குப்பை ஊழல்-Poonamallee municipality scam.

பூந்தமல்லி நகராட்சி OURLAND ENGINEERING பெயரில் கோடிக்கணக்கில் குப்பை ஊழல்-Poonamallee municipality scam.

பூந்தமல்லி நகராட்சியின் சுகாதாரபிரிவும், நகரமைப்பு பிரிவும் ஊழல் பண மழையில் மூழ்கிவிட்டதால், ஊழல் நகராட்சிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க பூந்தமல்லி நகராட்சி முன்னேறிக்கொண்டு இருக்கிறது..

 பூந்தமல்லி நகராட்சியில் OURLAND ENGINEERING WORKS PVT LTD பெயரில் நடந்த பல கோடி ஊழல் தொடர்பான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. இந் நிலையில் OURLAND ENGINEERING WORKS PVT LTD பெயரில் போலி பில் ஊழல் தொடருகிறது.

  1. செப்டம்பர் 2018 – ரூ10.95 இலட்சம் + ரூ12.44 இலட்சம்=ரூ23.40 இலட்சம்
  2. அக்டோபர் 2018 – ரூ12.86இலட்சம் + ரூ11.62இலட்சம்=ரூ24.48 இலட்சம்
  3. நவம்பர் 2018 – ரூ12.40 இலட்சம்+ரூ11.42 இலட்சம்=ரூ23.83 இலட்சம்
  4. டிசம்பர் 2018 – ரூ12.85 இலட்சம் +ரூ11.81 இலட்சம் = ரூ24.66 இலட்சம்

இப்படி ஒவ்வொரு மாதம் OURLAND ENGINEERING WORKS PVT LTD நிறுவனம் குப்பைகளை சுத்தம் செய்ய, தற்காலிக ஊழியர்களை அனுப்பியதாக சராசரி ரூ23 இலட்சம் முதல் ரூ25 இலட்சம் வரை  போலி பில் போடப்படுகிறது. ஆனால் பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பூந்தமல்லி நகராட்சி ஊழியர்களை குப்பைகளை அங்காங்கு எரித்துவிடுவதால், பூந்தமல்லி நகராட்சி பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதை தவிர வாலாஜாபாத் அக்ரோ இன்ஜினியரிங் சர்வீஸ் கூட்டுறவு லிமிட் நிறுவனம் குப்பைகளை அகற்ற டிராக்டர் வாடகைக்கு அனுப்பியதாக மாதா மாதம் சராசரி ரூ6 இலட்சத்துக்கு போலி பில் போடப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஒம் சக்தி எண்டர்பிரைசஸ் பெயரில் மாதா மாதம் ரூ6 இலட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது. விழிப்புணர்வுக்காக  ஒரே ஒரு  பேனர் வைத்ததாக போட்டோ காட்ட பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தயாரா? பேனர் வைக்கவில்லை என்று ஜனவரி 2019, பிப்ரவரி 2019ல் பூந்தமல்லி நகராட்சி பகுதிகள் முழுவதும் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்களை வெளியிட தயார்..

 குவிந்து கிடக்கும் குப்பைக்கு, அப்புறப்படுத்தாத குப்பைக்கு மாதா மாதம் பல லட்சம் போலி பில் போடுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

   நகரமைப்பு பிரிவில் சில மாதங்களுக்கு அப்ரூவலுக்கு கிச்சனுக்கு ரூ35,000/- இலஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டதாலும், இலஞ்சத்தின் பங்கு மேல்மட்டம் வரையில் செல்வதால் கிச்சனுக்கு ரூ45,000/- ஆக உயர்த்திவிட்டார்களாம்..

  பூந்தமல்லி நகராட்சி பணியாற்றும் அதிகாரிகள் இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *