Breaking News
Home / பிற செய்திகள் / TAMINக்கு மூடுவிழாவா? வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் பல கோடி ஊழல்.. சம்பளம் கொடுக்க பணம் இல்லை- TAMIN CLOSED?

TAMINக்கு மூடுவிழாவா? வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் பல கோடி ஊழல்.. சம்பளம் கொடுக்க பணம் இல்லை- TAMIN CLOSED?

டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட டாமினுக்கு மூடுவிழா நடத்த அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டார். டாமினை ஊழலில் மூழ்கடித்த வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் ஊழலால் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் முடங்கி போய் உள்ளது.

  1.  செவ்வாத்தூர் வெர்மிகுலைட் சுரங்கத்தில் வெர்மிகுலைட் 5300 டன் இருப்பு உள்ளதாக  கோப்புகளில் மட்டும் உள்ளது. ஆனால் சுரங்கத்தில் ஒரு கிலோ கூட இல்லை.
  2. சிவகங்கை கிராபபைட் குவாரியில் ஆறு ஆண்டுகளில் ரூ120கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
  3. சோளிங்கர் கோட்டம் கொடைக்கல் 1193/1 portion-11 கருப்பு கல் குவாரியில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. கருப்பு கல் குவாரியை காணவில்லை.
  4. மண் வாரி இயந்திரங்கள், டிப்பர்கள், கம்பரஸ்ஸர் மற்றும் இயந்திரங்கள் கொள்முதலில் பல கோடி ஊழல்.
  5. மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை விதித்த அபராதம் ரூ50கோடி செலுத்த முடியாத காரணத்தால், டாமின் குவாரிகள் செயல்படவில்லை.

வள்ளலார் ஐ.ஏ.எஸ், மேலாளர் ஹென்றி ராபர்ட், துணை மேலாளர் வெங்கடேசன், சுமந்தபாபு நால்வரி அணியின் பல கோடி ஊழலால், டாமின் நிர்வாகம் செயல்படாமல் முடங்கி போய்விட்டது. டாமின் ஊழியர்களுக்கு அரசிடமிருந்து மானியம் பெற்று சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் சம்பளம் ஜூலை மாதம் பாதி சம்பளம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடந்த டாமின் ஆய்வுக் கூட்டத்தில் ஊழல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு டாமினை  இனி காப்பாற்ற முடியாது என்று வெளிப்படையாக கூறியதாக தெரிகிறது.

   6.8.19ம் தேதி நடைபெற இருக்கும் டாமின் நிர்வாக குழுக் கூட்டத்தில் விருப்பு ஒய்வு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்வது தொடர்பாக ஆலோசனை நடக்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் டாமினுக்கு மூடுவிழா நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்..

 மக்கள்செய்திமையம் டாமினின் ஊழல்களை ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பி உள்ளது.

 எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த தொடங்கப்பட்ட டாமினை எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி ஆட்சியில் இருக்கும் போது, மூடுவிழா நடத்த முயற்சி செய்யும் ஆட்சியாளர்களை எம்.ஜி.ஆர் ஆன்மா மன்னிக்காது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *