Breaking News
Home / பிற செய்திகள் / இராமநாதபுரம் – பரமக்குடி பட்டா நிலம் பெயரில் மணல் கொள்ளை.. வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் மெளனம்- Ramnadu sand scam…

இராமநாதபுரம் – பரமக்குடி பட்டா நிலம் பெயரில் மணல் கொள்ளை.. வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் மெளனம்- Ramnadu sand scam…

திருவள்ளூர் மாவட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் வழிமறிச்சான் குரூப், பெருங்கரை குரூப் கிராமங்களில்  பட்டா நிலம் பெயரில் ஆற்று படுகைகளில் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளார். பட்டா நிலம் பெயரில் சவுடு மண், மணல் கொள்ளை போகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிந்தும் அனுமதி கொடுத்துவிட்டு மெளனமாக இருக்கிறார்..

  பரமக்குடி வழிமறிச்சான் குருப் கிராமத்தில் சர்வே எண்.295/3, 296/5, 297/2 ஆகிய பட்டா நிலங்களில் மேடு, பள்ளங்களை சரி செய்து விவசாய பணிக்கு உகந்த இடமாக மாற்றுவது என்ற பெயரில் உலகநாதன் என்பவருக்கு சவுடு மண் எடுக்க 20 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் சவுடு மண் எடுத்து, வெளியில் விவசாய இடங்களுக்கு கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் 200 லோடு வெளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 அதே போல் பரமக்குடி வட்டம் பெருங்கரை குரூப் கிராமத்தில் சர்வே எண்கள் 93/4&93/8 பட்ட நிலத்தில் விவசாயத்துக்கு பயன்படாத உபரி மண்ணை அள்ளி அப்புறப்படுத்துவதற்கு 26.7.2019ல் திருமதி முத்துராக்கம்மாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வே எண்ணுக்கு அருகில் ஆற்று படுகை உள்ளது. பட்டா நிலத்தில் உபரி மண்ணை அப்புறப்படுத்துவதாக கூறி, ஆற்று படுகையில் பொக்லைன் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

வழிமறிச்சான் குரூப், பெருங்கரை குரூப் இரண்டு கிராமத்திலும் பட்டா நிலம் பெயரில் சவுடு மண், மணல் தினமும் 400 லோடு கடத்தப்படுகிறது, அதாவது வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

  பெருங்கரை குரூப் கிராமத்தில் ஆற்றுபடுகையில் மணல் அள்ளப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகராவ் ஐ.ஏ.எஸ்க்கு புகார்கள் குவிந்தபடி இருக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் எதை கண்டுகொள்ளாமல், பட்டா நிலம் பெயரில் நடக்கு மணல் கொள்ளைக்கு  ஆதரவாக செயல்படுகிறார்.

 வழிமறிச்சான் குரூப், பெருங்கரை குரூப் கிராமங்களில் பட்டா நிலத்தில் சவுடு மண், உபரி மண் எடுக்க கொடுத்த அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *