Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு விருது மக்கள்செய்திமையம் பரிந்துரை- AVADI CORPORATION TOILET SCAM

ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு விருது மக்கள்செய்திமையம் பரிந்துரை- AVADI CORPORATION TOILET SCAM

ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை கேவலப்படுத்துவார், மாநகராட்சி அலுவலகத்தில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்..

 ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அறையில் உள்ள கழிப்பிடம் மிகவும் சுத்தமாக மல்லிகைப்பூ வாடையில் மிதக்கும். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்படத்திற்குள் நுழையவே முடியாது. கழிப்பிடத்தை பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சல் வருவது உறுதி..மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்பிடமே இவ்வளவு மோசமான நிலை என்றால் பொது மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடம் எப்படி இருக்கும் நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

  ஆவடி மாநகராட்சியில்(பெரு நகராட்சி) சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, நீர் பிடிப்பு பகுதிகளில் கொடுக்கப்பட்ட 1200 அப்ரூவல் கோப்புகளை  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பார்க்க அனுமதி கேட்டு அனுப்பிய கடிதங்களை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யா கை துடைக்கும் பேப்பராக பயன்படுத்தி, குப்பைக் கூடையில் போட்டு உள்ளார்.

 ரூ20 இலட்சம் மதிப்புள்ள நம்ம டாய்லட் குப்பை கிடங்கில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

 இப்படி மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற அடிப்படை தகுதியேஇல்லாமல், பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை சீரழித்து வரும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வரின் விருது கொடுக்க, மக்கள் செய்திமையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *