Breaking News
Home / பிற செய்திகள் / RRB ENERGY LTD பூந்தமல்லி ரூ9 கோடி ஊழலில் சிக்கிய நகராட்சி அதிகாரிகள்.. காணாமல் போன ஊழல் கோப்பு…

RRB ENERGY LTD பூந்தமல்லி ரூ9 கோடி ஊழலில் சிக்கிய நகராட்சி அதிகாரிகள்.. காணாமல் போன ஊழல் கோப்பு…

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் RRB energy ltd நிறுவனம் செயல்படுகிறது. RRB energy ltd நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கும் போது, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் பொது இடத்துக்கான 1.50 ஏக்கர் நிலம் அல்லது அதற்குரிய ரூ9கோடியை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பூந்தமல்லி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக இருந்த தயாநிதி வசூல் செய்யவில்லை. பொது இடத்துக்கான நிலத்தையும்  RRB energy ltd நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தவும் இல்லை. அதனால்

 நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் வலம் வந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற  தண்டபாணி ஐ.ஏ.ஏஸ், நகராட்சி நிர்வாகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய போது, ரூ9கோடி வசூல் செய்யாத, தயாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 செயலாளராக இருந்த டி.பி.யாதவ் ஐ.ஏ.எஸ்யிடம் ஒய்வு பெற்ற செங்கல்பட்டு பெண் மண்டல இயக்குநர் மூலம் பஞ்சாய்த்து நடந்தது. டி.பி.யாதவ் கோப்புகளை படித்து பார்த்துவிட்டு, 1.50 ஏக்கர் அல்லது ரூ9கோடி வசூல் செய்யாத பூந்தமல்லி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 இந்த கோப்பு பூந்தமல்லி நகராட்சி ஆணையராக சுரேந்திரஷா பணியற்றிய போது, நடவடிக்கை எடுக்க வந்தது. பிறகு இந்த கோப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. காணாமல் போனதாக பேசிக்கொள்கிறார்கள்.

    1.5ஏக்கர் அல்லது ரூ9கோடி வசூல் செய்யாத பூந்தமல்லி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல்  நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ் hentai elsa pornskill.com, கூடுதல் இயக்குநராக பணியாற்றி தற்போது தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் செபாஸ்டின், அமைச்சரின் உதவியாளராக இருந்த பார்த்தீபன் மூவரும் காப்பாற்றி வந்தார்கள்..

  தற்போது தயாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பு காணாமல் போய்விட்டதாம். நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் காணாமால் போய் விட்டதாக  அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள்..என்னமோ நடக்குது..ஒண்ணுமே புரியவில்லை..

   காணாமல் போன ஊழல் கோப்பை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தமிழக அரசின் முதல்வர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *