Breaking News
Home / பிற செய்திகள் / வாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா

வாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா

மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும்,  18 சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசாமான தொகுதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  தமிழகத்தில் அதிகாரமையத்தில் இருக்கும் கட்சியில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு இலட்சம் வாக்காளர்கள் என ஆறு இலட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ250 கொடுக்க முடிவு செய்துள்ளது. ரூ50 போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுக்கிறார்கள்.. ஆக மொத்தம் ஒரு வாக்குக்கு ரூ300 கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ18 கோடி செலவாகும்..இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் நமக்கேன் வம்பு…

 மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ300/- என ஆறு இலட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது mario shy gal porn pornskill. இதே போல் அதிகாரமையத்தில் இருக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா நடக்கிறது.

 ஒரு வாக்குக்கு ரூ300 என்றால் 5 ஆண்டுகளுக்கு அதாவது 1825 நாட்களுக்கு கணக்கீட்டால் ஒரு நாளைக்கு16பைசாதான் வருகிறது.. 16 பைசாவுக்கு வாக்கை விற்பனை செய்ய வேண்டுமாம்..

 எதிர்கட்சி கூட்டணியில், எதிர் கட்சி சின்னத்தில் போட்டியிடும் நில ஆக்ரமிப்பு மாபியா வேட்பாளர் ஒரு ஒட்டுக்கு ரூ2000ம் கொடுக்கிறார். இதை கணக்கீட்டால் ஒரு நாளைக்கு ரூ1.09 பைசாதான் வருகிறது.

 வாக்காளர்களின் மதிப்பு ரூ16 பைசா முதல் ரூ1.09 பைசாதானா…

  தமிழகத்தில் அதிகாரமையத்தில் இருக்கும் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் மகன் போட்டியிடும் தொகுதியில் ஒரு வாக்குக்கு ரூ2000கொடுக்கப்படுகிறதாம்..அதே போல் இன்னொரு கல்வி மாபியாவும் , டாய்லட் ஊழல் புகழ் வேட்பாளரும் ஒரு வாக்குக்கு ரூ2000/- தருகிறார்களாம்..

 திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் மதுரவாயில் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானவர் ஒரு வாக்குக்கு ரூ300/- என 6 இலட்சம் வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இதில் என்ன ஜாக்பாட் என்றால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் பூந்தமல்லி தொகுதி வாக்காளர்களுக்கு தலா ரூ500/- ஏனென்றால் இரண்டு ஒட்டு போட வேண்டும்..

 வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா, மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர், பறக்குபடை அதிகாரிகளுக்கு தெரியாதா?

 வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?

  தமிழகத்தில் நியாயமாக, நேர்மையாக தேர்தலை நடத்த முடியாத தேர்தல் ஆணையம் எதற்கு என்ற கேள்வி இளைஞர் பட்டாளத்திடம் எழுந்துள்ளது…

Comments

comments

About Anbu Admin

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *