Breaking News
Home / பிற செய்திகள் / பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி.. முன்னேறும் உதயசூரியன்… தடுமாறும் பரிசு பெட்டி.. காணாமல் போன இரட்டை இலை..

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி.. முன்னேறும் உதயசூரியன்… தடுமாறும் பரிசு பெட்டி.. காணாமல் போன இரட்டை இலை..

பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வைத்தியநாதனும், திமுக கூட்டணியில் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலையும் களத்தில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன்..

 அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் பராமரிப்பில் இருந்த கட்டிடத்தில் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பல டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணத்தில் டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுகவினரே ஆதாரங்களுடன் செய்திகளை பரப்புகிறார்கள்.. ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் கட்ட பஞ்சாய்த்தில் கிடைத்த நிலத்தில் அதி நவீன திருமண மண்டபம் கட்டி உள்ளார். இப்படி பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் அமைச்சர் பெஞ்சுமின், அமைச்சர் மா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் ரமணா பிரச்சாரம் செய்தாலும் மக்கள் கண்டு கொள்ளவில்லை.

 சம்பத் வாத்தியார் தனக்கு சீட் கிடைக்கும் நம்பிக்கையில் பல லட்சம்  செலவு செய்து ஏமாந்து போனார்.. முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறனும் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்து ஏமாந்து போனார்..இப்படி அதிமுகவில் பல கோஷ்டிகள் இருப்பதால் வைத்தியநாதன் தடுமாறுகிறார்.. அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை..இரட்டை இலை சின்னத்தை தேட வேண்டிய நிலைதான் உள்ளது..

 திமுக வேட்பாளருமான, முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி தொகுதி முழுவதும் நல்ல பெயர் உள்ளது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செய்யும் தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற மன நிலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் வாக்கு திமுக வேட்பாளருக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் அதிகம்..

அமமுக வேட்பாளர் ஏழுமலை

   அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஏழுமலை பம்பரமாக சுழன்று பணியாற்றினாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலங்களில் அமைச்சர் பெஞ்சுமினுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தற்போது தடுமாறுவது வெளிப்படையாகவே தெரிகிறது..அதிமுகவுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளை பெற முயற்சி செய்யவில்லை.

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் ஊழல்களை அதாவது பூந்தமல்லி நகராட்சி கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்த ஊழல்களையும், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஊழல்களை  மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் வெற்றி பெறலாம்..

 தற்போது உள்ள நிலையில் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியனுக்கும், பரிசு பெட்டிக்கும் இடையே போட்டி.. இரட்டை இலையை தேட வேண்டிய நிலைதான் உள்ளது..

Comments

comments

About Anbu Admin

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *