Breaking News
Home / தமிழகம் / TNCSC-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…34 மாதங்களில் வாங்கிய ரூ7113 கோடி கடன்..மொத்த கடன் ரூ25,000கோடியா?

TNCSC-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…34 மாதங்களில் வாங்கிய ரூ7113 கோடி கடன்..மொத்த கடன் ரூ25,000கோடியா?

தமிழக அரசின் கடன் ரூ3.97 இலட்சம் கோடி என்று வரவு செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ரூ3.97 இலட்சம் கடனில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கி கடன் சேர்க்கப்படவில்லை..

 தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம்  வாங்கி கடன்களை கணக்கீட்டால் தமிழக அரசின் மொத்த கடன் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்..

  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் குடும்ப அட்டைகளுக்கு 20கிலோ அரிசி, மலிவு விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்யும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகளை மேற்க்கொள்கிறது.

 தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு இலவச அரிசி வழங்குவதற்காக ஆண்டுகு ரூ5300 கோடி முதல் ரூ6000 கோடி மானியமாக மாநில அரசு வழங்குகிறது.

 இந் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாங்கிய கடன் பட்டியல்..

  2016 -17ம் ஆண்டில் –ரூ2690 கோடி..

  பாங்க் ஆப் இந்தியா – ரூ845 கோடி

  கனரா வங்கி – ரூ845கோடி

  பாரத ஸ்டேட் வங்கி – ரூ1000 கோடி..

2017-18ம் ஆண்டில் – ரூ2923கோடி

 பஞ்சாப் வங்கி – ரூ200கோடி

அலகபாத் வங்கி – ரூ150கோடி

பாரத ஸ்டேட் வங்கி – ரூ1373கோடி

யூனியன் பாங்க் ஆப் இந்தியா – ரூ1000 கோடி

கனரா வங்கி – ரூ200கோடி

1.4.18 முதல் 25.1.2019 வரை – ரூ1500கோடி

 இந்தியன் வங்கி – ரூ1000 கோடி

 கனரா வங்கி – ரூ500 கோடி

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மேலும் ரூ1300 கோடி கடன் வாங்குவார்கள்..

  34 மாதங்களில் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகம் வாங்கிய கடன் ரூ7113கோடி..

ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, மலிவு விலை வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயிலுக்காக தமிழக அரசு ஆண்டுக்கு சராசரி ரூ6000 கோடி மானியம் கொடுக்கும் போது, ஏன் கடன் வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் மொத்த கடன் ரூ25,000கோடி என்ற தகவலை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை..

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO..Poor planning and tardy implementation -7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 17ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *