Breaking News
Home / தமிழகம் / ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் என்னதான் நடக்கிறது..வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்…

ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் என்னதான் நடக்கிறது..வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்…

மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பதால், மூன்றாண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டார்கள்.. ஆனால் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு உள்ளார்கள்..  உதாரணமாக..

  1. திருமதி வி.வனிதா ஐ.பி.எஸ் டி.ஐ.ஜி வேலூர் சரகத்திலிருந்து, இணை ஆணையர் சென்னை மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டார்(Police Note No.SC/4/2019 – 19.2.19) Police Note No.SC/5/2019 -20.2.19ல் திருமதி வனிதா ஐ.பி.எஸ் மாறுதல் ரத்து செய்யப்பட்டு, டி.ஐ.ஜி வேலூர் சரகத்தில் பணியை தொடரலாம் என்று ஆணை வெளியானது.
  1. திருமதி பி.கே. செந்தில்குமாரி ஐ.பி.எஸ், இரயில்வே டி.ஐ.ஜி பணியிலிருந்து சென்னை மாநகர காவல்துறையின் இணை ஆணையர்(கிழக்கு) பணிக்கு மாற்றப்பட்டார்.( Police Note No.SC/5/2019 -20.2.19).  Police Note No.SC/5/2019 -20.2.19ல் திருமதி பி.கே.செந்தில்குமாரி ஐ.பி.எஸ், சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் கிழக்கு பணியிலிருந்து சிறப்பு காவல் படை சென்னைக்கு மாற்றப்பட்டார்.
  1. திரு பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை மாநகர காவல்துறையின் இணை ஆணையர் (கிழக்கு) பணியிலிருந்து வேலூர் சரக டி.ஐ.ஜி ஆக மாற்றப்பட்டார். (Police Note No.SC/4/2019 – 19.2.19) Police Note No.SC/5/2019 -20.2.19ல் திரு பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இரயில்வே டி.ஐ.ஜி பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  1. திருமதி எம்.வி. ஜெயகெளரி ஐ.பி.எஸ் டி.ஐ.ஜி சிறப்பு காவல்படை சென்னை பணியிலிருந்து சென்னை மாநகர காவல்துறையின் இணை ஆணையர்(கிழக்கு) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.. (Police Note No.SC/6/2019 -20.2.19)

 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் நான்காண்டுகளாகியும் மாற்றப்படவில்லை ஏன்…குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாக்குகளை பெற பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை என்பது உண்மையா?

 ஐ.பி.எஸ் அதிகாரிகள்  தொடர்ச்சியாக மாற்றப்பட்டதிலும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் நான்காண்டுகளாகியும் மாற்றப்படாமல் இருப்பதையும் பார்க்கும் போதும் மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சி ஏதோ திட்டமிட்டு செயல்பட போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

  இதையெல்லாம் எப்படி தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

 

 

 

 

    

 

 

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO..Poor planning and tardy implementation -7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 17ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *