Breaking News
Home / தமிழகம் (page 3)

தமிழகம்

சிறைக்கு செல்லும் – அடுத்த சத்தியமூர்த்தி – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யா !

ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக ஐந்தாண்டு காலம் பணியாற்றிய  சத்தியமூர்த்தி ஐ.ஏ.எஸ், சுடுகாட்டு ஊழலில் சிக்கி சிறைக்கு சென்றார். சத்தியமூர்த்தி பாணியில் ஐந்தாண்டு காலமாக ஊரக வளர்ச்சித்துறையில் இயக்குநர் பதவியில், உள்ளாட்சித்துறையின் அதிகாரமையத்தில் வலம் வருகிறார் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்..  திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, திமுக தலைவரும், முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பதை மறந்துவிட முடியாது..  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த …

Read More »

தமிழகத்துக்கே சோறு போட்ட விவசாயிகள் – பட்டினியால் தவிக்கும் கொடுமை..குறட்டைவிடும் ஊடகங்கள்..

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்து போய்விட்டது. தமிழகத்துக்கே சோறு போட்ட விவசாயிகள் பட்டினியால் தவிக்கிறார்கள். தவித்த வாயிக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை.  நிவாரணப்பணி என்ற பெயரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் அடிக்கும் கூத்தை பார்க்கும் போது, மனிதாபிமானம் செத்து போய்விட்டது என்பதைதான் காட்டுகிறது.  புதுக்கோட்டை ஆலங்குடி கொத்தமங்கலம்- கீரமங்கலத்தில் நிவாரணம் கேட்டு மக்கள் போராடினார்கள். வட்டாட்சியரை சிறை பிடித்தார்கள். இதனால் ஏற்பட்டு கலவரத்தில் அரசு வாகனங்கள் …

Read More »

சிக்கிய வைகுண்டராஜன் -ரூ800கோடி வரி ஏய்ப்பு- மக்கள்செய்திமையம் புகாரில் நடவடிக்கை

வி.வி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், வீடுகளில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.  வருமான வரித்தரப்பில் வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ800கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் 8 சுரங்கள் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போலி நிறுவனங்கள் மூலம் பல நாடுகளில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளது தொடர்பான பல ஆவணங்கள்  வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளது.  வைகுண்டராசன், அவரது தம்பி ஜெகதீசன், வைகுண்டராசன் மகன்களையும் சம்மன் …

Read More »

அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்ற விஜிலென்ஸ் ரெய்டு- 2700 கிராம் தங்க காசு வசூல்?

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை காப்பாற்ற ரெய்டு நடத்தி வருகிறது. அமைச்சர் அலுவலகங்கள், துறைத் தலைவர் அலுவலகங்களில் ஏன் ரெய்டு நடத்தவில்லை.  நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில் 1.11.18 ஆய்வு கூட்டம் நடந்தது. ஆய்வு கூட்டம் தொடர்பான கடிதத்தில் ஆய்வு கூட்டம் எங்கே நடக்கிறது என்ற தகவல் இல்லை. மெட்ரோ வாட்டர் அலுவலம், குடி நீர் வடிகால் …

Read More »

நரகத்தில் கருவூலத்துறை ஊழியர்கள்..தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் கூத்து

தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் ஆணையராக இருக்கும் தென்காசி எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் நல்லவர், பணம் வாங்குவதில் வல்லவர்.. தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் அலுவலக உதவியாளரின் (ஆல் இன் ஆல்) மகன், தான் படிக்கும் பள்ளியில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட பள்ளி நிர்வாகம் தற்காலிக  நீக்கம் செய்துவிட்டது.   ஆணையர்  தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் யிடம் ஆல் இன் ஆல் உதவியாளர் புலம்பினார். செல்போனை எடுத்த  ஆணையர் சம்பள கணக்கு …

Read More »

18 எம்.எல்.ஏக்கள்-தகுதி நீக்கம் செல்லும்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு-டி.டி.வி தினகரன் அதிரடி முடிவு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் 18 எம்.எல்.ஏக்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  18 எம்.எல்.ஏக்களும், உயர்நீதிமன்றத்தின் தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் அமர்வு வழங்கிய தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தகுதி …

Read More »

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி..சங்கரன் தற்கொலை- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியில் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு ரூ1.50 இலட்சம் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.. வங்கி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு எப்படி எந்த தேர்வுக்கு பயிற்சி அளித்தாலும் இலட்சக்கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது..பணக்கார மாணவர்கள், ஆங்கில அறிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்கு சேர்க்கப்பட்டார்கள்..   அரசு பள்ளியில் படித்தால் முழுமையாக ஆங்கில அறிவு கிடைக்குமா? நம்மூர் ஏழை மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிராமத்திலிருந்து கலெக்டர் ஆகலாம் என்று …

Read More »

பெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் உரிமையாளர் திருசெங்கோடு நல்லகவுண்டன்பாளையம் சங்கரன் 12ம் தேதி விடியற்காலை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்யும், சங்கரன் மனைவி வைஷ்ணவியும் நெருங்கிய உறவினர். ஐ.ஐ.டியில் 2008-2011ல் பி.எச்.டி ஒன்றாக படித்தார்கள்..  சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி  சங்கரன் மனைவி, சங்கரன் மாமனார் இருவரும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகளை அகடமியில் வகுப்பு …

Read More »

MY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் MY CHILD MY CARE திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மக்கள்செய்திமையம், தமிழக ஆளுநர் அவர்களுக்கு, இயக்குநர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு அனுப்பிய புகார் மனுவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த செய்தி தொடர்பாக சிலைடுயும் வெளியானது.  8.10.18ம் தேதி மதியம் 2.50 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் அவர்கள் 04175 -232260 எண்ணிலிருந்து தொடர்புக்கொண்டார். MY CHILD MY …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து, MY CHILD MY CARE என்ற அறக்கட்டளை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார்கள்..   முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12,000 ஆசிரியர்களிடம் MY CHILD MY CARE அமைப்புக்கு  கட்டாய  வசூல் ரசீது இல்லாமல் ரூ3கோடி வசூலித்துள்ளார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் …

Read More »