Breaking News
Home / தமிழகம்

தமிழகம்

கோயம்புத்தூர் தொகுதி…சி.பி.ராதாகிருஷ்ணனின் ரூ2.12கோடி கடன் கதை…பாஜக ஆட்சியில் தொழில் வளரவில்லையா?

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக –அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.. மிஸ்டர் கிளீன் அன்பாக அழைக்கப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத ஸ்டேட் பாங்கில் ரூ2கோடி கடன் வாங்கிய கதையை கேளுங்கள்..  SPICE TEXTI நிறுவனம் சென்னையில் பாரத ஸ்டேட் பாங்கில் 27.12.07ல் ரூ2கோடி கடன் வாங்குகிறது. திருப்பூரில் இருக்கும் நிறுவனத்துக்கு சென்னையில் கடனா என்று கேள்வி கேட்காதீர்கள்..  SPICE TEXTI நிறுவனத்தின் கடனுக்கு, உரிமையாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் …

Read More »

அதிமுக கூட்டணியில் இணைந்த- தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்?

தமிழ்நாடு  தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்யின் செயல்பாடுகளை பார்க்கும் போது அதிமுக – பா.ஜ.ககூட்டணியில் இணைந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 24.9.14 முதல் பணியில் உள்ளார். 12600 கிராம பஞ்சாய்த்துக்கள் மற்றும் மக்களுடன் தொடர்புடைய பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 54 மாதங்களாக பணியாற்றுகிறார்,அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று 25.2.19ல் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யா பிரதாசாகு ஐ.ஏ.எஸ் கடிதம் …

Read More »

அமைச்சர்களின் சொகுசு பங்களாக்களுக்கு – பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ2.74கோடி

சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்களின் பங்களாக்களுக்கு பராமரிப்பு செலவு, குடி நீர் செலவு, பர்னீச்சர் செலவு என ஆண்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தார் பாய் வாங்க கூட பணம் இல்லாமல் தவிக்கிறார்கள்.  பராமரிப்பு செலவு… ஜனவரி 2016 –மார்ச் 2016 – ரூ82.02 இலட்சம் 2016 ஏப்ரல் – மார்ச் …

Read More »

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO..Poor planning and tardy implementation -7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 17ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  I was distressed to learn that tamilnadu is lagging behind other states in securingcentral assistance.   I was disturbed to lears that of late in the case of many …

Read More »

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கம்..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி கடந்த 20 ஆண்டுகளாக பினாமி நிறுவனங்களின் பெயரில் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்து வந்தார்..முட்டை சப்ளை  மெகா ஊழல் நடந்துள்ளது. தினமும் ஒரு முட்டைக்கு ரூ1/- என தினமும் ரூ50 இலட்சம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு கமிசன் கொடுக்கிறார். இதை வருமான வரி விசாரணையில் குமாரசாமி ஒப்புக்கொண்டு உள்ளார். 2018ல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் …

Read More »

TNCSC-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…34 மாதங்களில் வாங்கிய ரூ7113 கோடி கடன்..மொத்த கடன் ரூ25,000கோடியா?

தமிழக அரசின் கடன் ரூ3.97 இலட்சம் கோடி என்று வரவு செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ரூ3.97 இலட்சம் கடனில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கி கடன் சேர்க்கப்படவில்லை..  தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம்  வாங்கி கடன்களை கணக்கீட்டால் தமிழக அரசின் மொத்த கடன் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்..   தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் குடும்ப அட்டைகளுக்கு 20கிலோ அரிசி, …

Read More »

ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் என்னதான் நடக்கிறது..வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்…

மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பதால், மூன்றாண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டார்கள்.. ஆனால் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு உள்ளார்கள்..  உதாரணமாக.. திருமதி வி.வனிதா ஐ.பி.எஸ் டி.ஐ.ஜி வேலூர் சரகத்திலிருந்து, இணை ஆணையர் சென்னை மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டார்(Police Note No.SC/4/2019 – 19.2.19) Police Note No.SC/5/2019 -20.2.19ல் திருமதி …

Read More »

மக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD

மக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம் கோடி ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.  மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பல ஊழலுக்கான ஆதாரங்களை பெற்று, 15 ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஊழல்களை அம்பலபடுத்தியதால், ஆசிரியர் அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, …

Read More »

பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா?..

பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்   “PHONY” யா என்ற கேள்வி சென்னை மாநகர மக்களிடம் எழுந்துள்ளது.  ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரை பெயரில் Quotation work order அதாவது டெண்டர் இல்லாமல் பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.  அதே போல் SPK & co  நிறுவனத்துக்கும் டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டு வருகிறது.   பெரு நகர சென்னை …

Read More »