Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 5)

முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் –திருவள்ளூர் மாவட்டம்…நகராட்சிகளில் ரெய்டும் இல்லை…வழக்கும் இல்லை…விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஊழல் கூட்டணி..

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளுக்கு பத்திரபதிவுத்துறை, ஆர்.டி.ஒ அலுவலகங்களை தவிர மற்ற அரசு அலுவலகங்களில் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டு கொள்வதே இல்லை.  2016,2017,2018 ஆகிய மூன்றாண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதும் இல்லை, ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மாதா, மாதம் மாமூல் கொடுப்பதாக நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நகரமைப்பு …

Read More »

ரிசர்வ் வங்கி ஆளுநர்-சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ்யின்-நில ஒதுக்கீடு ஊழல்

மத்திய அரசில் பொருளாதார விவாகாரத்துறை செயலாளராகவும், வருவாய்த்துறை செயலாளராகவும் பணிற்றிய ஒய்வு பெற்ற சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ் 2006-11 திமுக ஆட்சியில் தொழில் துறை செயலாளராக பணியாற்றினார்.  அப்போது அமெரிக்காவை சேர்ந்த SANMINA INDIA AND SANMINA –SCI நிறுவனத்துக்கு ஒரகடம்த்தில் 100ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதில் விதிமுறை மீறி, சட்டத்துக்கு புறம்பாக நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார் சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ்  SANMINA …

Read More »

திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் …ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்றுகிறாரா…

தமிழக அரசின் மீது பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட புகாரை, தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்…?   Petn.No.11150/2018/PUB/CC – HQ dated 16.11.2018 ல் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் & Petn.No.11089/2018/PUB/CC-HQ dated 16.11.18ல் பேரூராட்சிகளின் இயக்குநர்  பழனிசாமி ஐ.ஏ.எஸ்  & Petn.No.10100/2018/PUB/TVM dated 16.10.18ல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் …

Read More »

டாமின் திவாலாவா…ஊழல் அதிகாரி வெங்கடேசனுக்கு பதவி உயர்வு-மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் சாதனை…

டாமின் நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, வள்ளலாரின் ஊழல் சாதனையால் டாமின் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, டாமின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.  டாமின் நிர்வாக இயக்குநராக மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் இருந்தாலும், பின்னணியில் டாமினை இயக்குவது வள்ளலார் ஐ.ஏ.எஸ்தான்.. டாமின் துணை மேலாளர் வெங்கடேசன், ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்..வெங்கடேசனுக்கு 9.4.13ல் குற்றச்சாட்டு குறிப்பாணை …

Read More »

ராஜேந்திரனை காப்பாற்றிய -பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஆவடியிலிருந்து திருவள்ளூர் மாற்றம்

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி அப்ருவல் மற்றும் சி.எம்.டி.ஏ அப்ரூவலில்  சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த புகாரில், சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து, முறைகேடாக கொடுக்கப்பட்ட அப்ரூவல் கோப்புகளை கைப்பற்றினார்கள். அந்த அப்ரூவல்களை ரத்து செய்ய உத்தரவிட்டார்கள்..           கோயில் பதாகையில் பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டு போடப்பட்ட MCB லே –அவுட், சப் – டிவிசனின் நடந்த முறைகேடு தொடர்பான கோப்புகளை சி.எம்.டி.ஏ …

Read More »

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம்-சர்வர் முடங்கி போனதா.. முடக்கப்பட்டதா…குறட்டைவிடும் அரசியல் கட்சிகள்…

தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரிகளின் மீதான ஊழலை புகாரை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா Extraordinary gazette publication 2018ல்  379 -13.11.18 part –II –section 1 personnel and Administrative reforms department –Date of coming in to force of the TAMILNADU LOKAYUKTA ACT 2018   என்று உள்ளது.  379ஐ கிளிக் செய்தால், அரசாணையின் …

Read More »

பூந்தமல்லி நகராட்சி- நவீன டிஜிட்டல் கழிப்பறை-1000 கொசு வாங்கினால் 1000 கொசு இலவசம்.. இரா.டிட்டோவுக்கு நன்றி

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த  தூய்மை இந்தியா திட்டத்தில் , நவீன டிஜிட்டல் கழிப்பறையின் அவலமான நிலையைதான்.. 5.12.18ம் தேதி மதியம்  12.55க்கு எடுக்கப்பட்ட போட்டோ.. இப்படிப்பட்ட நவீன டிஜிட்டல் கழிப்பறையை நகராட்சி அலுவலகத்தில்  பராமரிக்கும் ஆணையர் இரா.டிட்டோவுக்கு நெஞ்சார்ந்த நன்றி…   நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையே டெங்கு கொசு பண்ணையாக  செயல்படும் போது, மக்கள் வசிக்கும் பகுதிகளை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக …

Read More »

ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்…

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சப் –டிவிசன், லே அவுட்டுகளுக்கு அனுமதி கொடுத்த முறைகேட்டில் 3.12.18ம் தேதி மாலை நகரமைப்பு ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.  3.12.18ம் தேதி இரவு ஆவடி பெரு நகராட்சி லைசென்ஸ் சர்வேயர்களை அழைத்து பேசும் போது, 15 அப்ரூவல் சி.எம்.டி.ஏ ரத்து செய்ய கடிதம் அனுப்பி உள்ளது. கோயில் பதாகை பாலாஜி …

Read More »

525 பேரூராட்சிகளில்-பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து ஊழல்-அதிகாரிகள் வீட்டில் பண மழை..

  தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டாலே  பேரூராட்சிகள், நகராட்சிகளில் அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்..அக்டோபர் முதல்ச்  ஜனவரி மாதம் வரை நான்கு மாதங்களில் பல லட்சம் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து கொள்முதல் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு என்ற பெயரில் லட்சக்கணக்கில் போலி பில் போட்டுவிடுவார்கள்..  பேரூராட்சிகளில் ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் ஆண்டியூர், ஊத்தங்கரை பெயரில் போலி பில் போடப்பட்டு வருகிறது. ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் பெயரில் ரூ9000க்குள் போலி பில் போடுவார்கள்.. …

Read More »

ஆவடி பெரு நகராட்சி உள்ளிட்ட- 9 நகராட்சிகள் கொடுத்த அப்ரூவல்களில்- ரூ1000கோடி இலஞ்சம்..

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், ஆவடி நகராட்சியை மொட்டை அடித்த பணத்தை வைத்து, திருச்செந்தூர் முருகனுக்கே மொட்டை போட முடிவு செய்துவிட்டார். திருச்செந்தூர் முருகன் காப்பாற்றுவாரா…  ஆவடி பெரு நகராட்சியில் மக்கள்செய்திமையம் கொடுத்த புகாரின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் கொடுத்த 15 அப்ரூவல்களை ரத்து செய்ய, சி.எம்.டி.ஏ கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் ஆவடி பெரு நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் பேரம் பேசி வருகிறார். மேலும் …

Read More »