Breaking News
Home / பிற செய்திகள் (page 72)

பிற செய்திகள்

திருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு ஊழலில் NO.2 விருது கொடுக்கலாம்.. ஏனென்றால் ஊழலில்  NO.1 விருதை ஆவடி நகராட்சி பெற்றுவிட்டது.. ஊழலில் சூப்பர் 1A விருதை தாம்பரம் நகராட்சி பெற்றுள்ளது..  திருவேற்காடு நகராட்சி ஆணையர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு குப்பை கிடக்கற்ற நகராட்சி என்று அரசிதழில் வெளியிடும்படி கடிதம் எழுதி உள்ளார்.. ஊழல் இல்லாத நகராட்சி என்று அரசிதழில் வெளியிடும்படி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தால் நாம் …

Read More »

திருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் பொறுப்பு ஆணையர் கம் நகராட்சி பொறியாளராக சங்கர் இருந்த போது கோடிக்கணக்கில் போலி பில் போடப்பட்டது..சங்கர் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துவிட்டார்.. நகராட்சி பதவியிலிருந்த அரசியல்வாதிகள் இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்கள்..  பொறுப்பு ஆணையர் சங்கர், நம்ம டாய்லட் திட்டத்திற்கு ஒரு கோடி ஒதுக்கீடு செய்து, மேல அய்யனம்பாக்கம், கீழ் அய்யனம்பாக்கம், கோலடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டது. நம்ம டாய்லட்டில் தண்ணீர் வசதி செய்து …

Read More »

பூந்தமல்லி நகராட்சி- ஐந்து நாட்களில் ரூ27 இலட்சம் பில்

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில்  2015 நவம்பர், டிசம்பர் மாதம் ஐந்த நாட்களில் போடப்பட்ட பில்லை பாருங்கள்… 11.15 – ரூ4.63 இலட்சம் 11.15 – ரூ1.15 இலட்சம் 12.15 – ரூ6.29 இலட்சம் 12.15 – ரூ4.01 இலட்சம் 12.15 – ரூ3.25 இலட்சம் 12.15 – ரூ48,752 12.15 – ரூ48,752 22,12,15 – ரூ 1.08 இலட்சம் 12.15 – ரூ31,064 12.15 – …

Read More »

சிக்கிய SPK construction- பொட்டு சுரேஷின் பினாமி நாகராஜ்- கே.என்.நேரு தம்பி ரவிக்கு என்ன தொடர்பு…தொல்லாமூர் கண்ணனிடம் ரூ400கோடி

வருமான வரித்துறை அதிகாரிகள் SPK construction நாகராஜ் அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய ரெய்டில் சுமார் ரூ225 கோடி பணமும், சுமார் 150 கிலோ தங்க கட்டிகளும் சிக்கியுள்ளது.  17.7.18ம் தேதி இரவு 7மணிக்கு கிடைத்த தகவலின் படி அண்ணா மேம்பாலம் கீழே சென்னை சிட்டி சாலை செயற் பொறியாளர் இளங்கோவின் அலுவலகத்தில் ரூ4கோடியும், மயிலாப்பூரில் ரூ30 கோடியும், நுங்கம்பாக்கத்தில் ரூ40கோடி ஆக மொத்தம் ரூ74கோடி சிக்கியுள்ளது.. வருமான வரித்துறை அதிகாரிகள் …

Read More »

தூத்துக்குடி- ஆறுமுகநயினார் மருமகன் மீது வழக்கு-ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய கருப்பசாமி ஐ.பி.எஸ்

தூத்துக்குடியில் 7.9.17 அன்று  அதிமுக முன்னாள்  மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள்  டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம்  எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் …

Read More »

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியா…கொசு வலை குமாரசாமியா..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி அலுவலகங்கள், வீடுகளில் ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு முடிந்துள்ளது. வருமான வரித்துறை விசாரணையில் குமாரசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்த பட்டியலை எழுத்து மூலம் கூறிவிட்டதாக தெரிகிறது..  குமாரசாமியின் வாக்குமூலத்தால், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை அதிர்ச்சியடைந்துள்ளார்கள்..  சமூல நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை கூட அண்ணன் குமாரசாமிக்குதான் டெண்டர் …

Read More »

கோயம்புத்தூர் மாவட்டம்..பறவை காய்ச்சல் பெயரில் பல கோடி..மோசடி பில்கள்..விசாரணைக்கு உத்தரவு..

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி, மருதூர் ஊராட்சி, துலாம்பாளையம் ஊராட்சி, சிக்கதாசம்பாளையம், பெலாம்பாளையம், பெல்லாதி, இரும்பொறை, இலுப்பாதிகம், ஒடந்துறை, ஜடாயாம்பாளையம், வெள்ளங்காடு,நல்லந்துரை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பறவை காய்ச்சல் நோட்டீஸ் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ5500/- போலி பில் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் மோசடி நடந்துள்ளது. இது போல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் ரூ5500 /- …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் …குன்றுத்தூர் – இடைக்கழிநாடு..பேரூராட்சிகளில் ஊழல்

உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சி இயக்குநர்களின் நிர்வாக திறமையில்லாத காரணத்தாலும், பேரூராட்சிகளின் தனி அலுவலர்கள் ஊழல்களில் மிதப்பதாலும் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி போய்விட்டது..கோடிக்கணக்கில்  பேரூராட்சிகளில் ஊழல் நடந்துள்ளதை ஆதாரங்களுடம் மக்கள்செய்திமையம் சேகரித்துள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சியில் 2015-16ல் வணிக வரித்துறைக்கு மதிப்பு கூட்டு வரி செலுத்துவதற்கான ரூ14.89 இலட்சத்திற்கு காசோலை(எண்.513397/31.3.16) தயாரித்துவிட்டு, அந்த காசோலையை வணிகவரி அலுவலகத்துக்கு அனுப்பவே இல்லை. வணிக வரி அலுவலகத்துக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட …

Read More »

கோயம்புத்தூர் மாநகராட்சி…குறட்டைவிடும் நிர்வாகம்.. ஆர்.டி.ஐ சட்டம் குளறுபடி..

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அதிபுத்திசாலிகள் அதிகமாக பணியாற்றுவதால், நிர்வாகம் முடங்கி போய்விட்டது.. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் குறட்டை விடுவது ஆதாரங்களுடன் அம்பலமாகிறது…   கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து 4.6.18ம் தேதி வீட்டு முகவரிக்கு கடிதம் வந்தது.. கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன்..நான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்காத தகவலுக்கு பதில் வந்துள்ளதே என்று கடிதத்தின் பார்வையில் பார்த்த போது, தகவல் பெறும் உரிமைச் …

Read More »

மதுரை மாநகராட்சி … ஊழலில் மூழ்கியது ..சம்பளம் கொடுக்க நிதி இல்லை

உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாய்த்து முதல் மாநகராட்சி வரை ஊழலில் சிக்கி தவிக்கிறது. மதுரை மாநகராட்சி ஊழலிம் மூழ்கிவிட்டது. மதுரை மாநகராட்சிக்கு அயல்பணியில் தலைமை கணக்கு அதிகாரி நியமிக்கப்படுவார். அயல் பணி முடிந்து சொந்த துறைக்கு போகும் போது தலைமை கணக்கு அதிகாரியை ஒப்பந்தகாரர்கள் சந்தித்து பேரம் பேசினார்கள். இதை தொடர்ந்து தலைமை கணக்கு அதிகாரி  பொது நிதியிலிருந்த மொத்த பணத்தை, ஒப்பந்தகாரருக்கு நிலுவையை தொகையை பட்டுவாடா செய்துவிட்டார்.. பொது …

Read More »