Breaking News
Home / பிற செய்திகள் (page 71)

பிற செய்திகள்

சீரழிந்து போன செய்தித்துறை- கொலை செய்துவிடுவேன்-மிரட்டும் திவாகர் பி.ஆர்.ஒ

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஊழலில் சிக்கி சீரழிந்து போய்விட்டது. சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியில் பி.ஆர்.ஒவாக பணியாற்றும் திவாகர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிகளில், செய்தியாளர்களுக்கு கவர் கொடுப்பது, இவரது முக்கிய பணி..அரசு மலர் இணையதளத்தின் ஆசிரியர் பாலமுருகனுக்கு கவர் கொடுக்க திவாகர் மறுக்க, பாலமுருகன் செய்தி வெளியிட பிரச்சனை ஏற்பட்டது. பி.ஆர்.ஒ தான் அரசு ஊழியர் என்பதைப்பற்றி கவலைப்படாமல், பாலமுருகன் செல்போனில் தொடர்புக்கொண்டு கெட்ட …

Read More »

ஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..

கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டணி அமைத்து, ஆவின் நிறுவனத்தை மொட்டையடித்து வருகிறார்கள்..  சேலம் புரோக்கர்  தமிழரசுவின் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் நியமன ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாமூல் தகராறில் இரண்டு அதிகாரிகளை மாற்றிய ஊழல் அரங்கேறியுள்ளது.  ஆவினில் ஆல் இன் ஆல் பொறியாளர் ரவிக்குமார், கொள்முதல் மேலாளர் செல்வம் இருவரும் தான் ஆவின் ஊழலில் முக்கிய பங்கு …

Read More »

பம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…

காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் நகராட்சி என்றாலே தலைவராக இருந்த சி.வி. இளங்கோவன் செல்போன் பேசிக்கொண்டே தேசிய கொடி ஏற்றியதுதான் நினைவுக்கு வருகிறது. பம்மல் நகராட்சி ஊழல், நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி, மூழ்கிவிட்டது..   சி.எம்.டி.ஏ நிதியிலிருந்து 8.1.2015ல் சங்கர் நகர் 40வது தெரு பூங்காவுக்கு ரூ25 இலட்சமும், ஜெயின் ஹவுசிங்கில் உள்ள பூங்காவுக்கு ரு34 இலட்சமும், விஸ்வேஷபுரம் 148 வது தெருவில் உள்ள பூங்காவுக்கு ரூ25 இலட்சம் என ரூ84 …

Read More »

கும்முடிபூண்டி தொகுதி- விஜயகுமார் எம்.எல்.ஏ- அலுவலகமா? பழைய இரும்புக்கடையா?

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சுதர்சனத்தின், எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.. எம்.எல்.ஏ அலுவலகத்தின் வளாகத்தில் பழைய இரும்புக்கடை  கம்பிகள், தகரங்கள் உள்ள இரும்புகள் ஆங்காங்கே குவிந்துகிடக்கிறது.   தமிழக அரசின் கார்  TN 09 G 2118 மற்றும் பொலிரோ கார் இரண்டும் பயன்படுத்தாமல், துரு பிடித்து நின்றுக்கொண்டு இருக்கிறது.. ஒரு வேளை எம்.எல்.ஏ அலுவலகத்தில் பழைய இரும்புக்கடை நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. …

Read More »

இராமசமூத்திரம் ஊராட்சி..முடக்கப்பட்ட சமத்துவபுரம்.. அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா?

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம் இராமசமூத்திரம் ஊராட்சியில் 2010-11 திமுக ஆட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டப்பட்டது. 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டப்பட்டது.  100 சமத்துவபுரம் வீடுக குடி நீர் தேக்க தொட்டியும் பணிகள் முடியும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி  2011 மே மாதம் அமைந்தது. இராமசமூத்திரம் ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டுமான பணி …

Read More »

ஊரக வளர்ச்சித்துறையா-ஊழல் வளர்ச்சித்துறையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2017-18ல் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள  குளம், குட்டை, ஊரணி, ஏரிகளுக்கு நீர்  செல்லும் 15,000 கிமீட்டர்  நீர் வழிப்பாதையை ரூ525கோடியில் பராமரிப்பு மற்றும் புதிய பாதைகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டதா கோப்புகளில் உள்ளது. ஒரு கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் கூட பராமரிக்கப்படவில்லை.. புனரமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை… கடந்த மூன்றாண்டுகளில் 2016ம் ஆண்டு வரை 45,094கிமீட்டர் நீர் வழிப்பாதைகளை ஒரு …

Read More »

கூலித் தொழிலாளர்கள் பெயரில் கோடிக் கணக்கில் வங்கி கடன்.. மோசடி பின்னணியில் வங்கி மேலாளர் *ராமநாரயணன்…

.தேனி மாவட்ட தென்கரை பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி விருதுநகர் பருப்பு ஆலை உரிமையாளர் OMS.வேல்முருகன். அவர் தனது ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் *வெயில்முத்து, காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ்* மற்றும் *கணேசன்* ஆகியோரிடம் உங்கள் அனைவருக்கும் காப்பீடு வாங்கி தருகிறேன் என்று கூறி, தனது அக்கா மகன் செண்பகன் அவரின் மகள் இந்துமதி ஆகியோருடன் சேர்ந்து பெரியகுளம் தென்கரையில் உள்ள பாரத …

Read More »

வருமானவரித்துறை & சிபிஐ ரெய்டுகள்-எனக்கு கவலையில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் புலம்பல்…

MDM குட்கா மாதவராவிடம் மாமூல் வாங்கிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிபிஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ், முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது..   இதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ்யை டிஜிபி பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை …

Read More »

சுகாதாரத்துறை -இட ஒதுக்கீடு அமுல்படுத்தாமல்- 49 BIO- Medical Engineers நியமன ஊழல்

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்களை மாவட்டம் வாரியாக சரி பார்க்கவும், பராமரிக்கவும் 61 BIO Medical engineers நியமனம் செய்ய முடிவு செய்தது. தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜெக்ட்டில்  தற்காலிகமாக பணியாற்றிய 49 BIO Medical engineersகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்தாமல் நியமனம் செய்துக்கொள்ள முடிவெடுத்து, இதற்கான அரசாணை …

Read More »

ஈரோடு – பெருந்துறை- கிராவல் மண் லாரி விடுவிப்பு.. பின்னணி மிரட்டல் கதை…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா புங்கம்பாடியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த லாரியை பரிசோதனை செய்த போது, லாரியின் ஆவணங்கள் அனைத்தும் போலியாக இருந்தது.. அதனால் பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் லாரி பறிமுதல் செய்து 27.7.18 அன்று நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர் லாரி மீது வழக்கு போடும்படி உத்தரவிட்டார். ஆனால் பெருந்துறை தாசில்தார்  வீரலட்சுமி பறிமுதல் செய்யப்பட்ட  எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. …

Read More »