Breaking News
Home / பிற செய்திகள் (page 69)

பிற செய்திகள்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் – தொழிலாளர்களுக்கு ரூ2000/- விண்ணப்படிவம் குப்பைக் கூடையில்..கணினி மையங்களில் அட்டூழியம்

மக்களவைத் தேர்தலுக்காக ஆளும் அதிமுக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு குறிப்பாக ஏழை தொழிலாளர்கள் 60 இலட்சம் பேருக்கு ரூ2000 கொடுப்பதாக அறிவித்தது. உண்மையில் 28 பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள்.. ஆனால் 60 இலட்சம் பேர் என்று அரசு அறிவித்த காரணத்தால்  இதற்கான விண்ணப்பம் படிவம் நகராட்சியில், வருவாய் அலுவலகங்களிலும் கிடைக்கிறது. விண்ணப்படிவங்களை புரோக்கர் கும்பல் பூர்த்தி செய்து கொடுக்க, ரூ100 வசூல் …

Read More »

ஊழலில் மூழ்கிய வட சென்னை அனல் மின் நிலையம் – எரியும் நிலக்கரி – கோடிக்கணக்கில் நட்டம்…

வட சென்னை அனல் மின் நிலையம் யூனிட் -1ல் ECHS பிரிவில்  நிலக்கரி பராமரிப்பு பணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் முறையாக சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிந்துக்கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காட்டுமன்னார்குடியை சேர்ந்த ராதா ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் நெய்வேலி உள்ளிட்ட இந்தியா முழுவதும் நிலக்கரி நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்துள்ளது. மேலும்  வட சென்னை அனல் மின் நிலையத்தில் கோல் …

Read More »

செய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…

செய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..  திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா  DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..   பாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது …

Read More »

திண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. விருந்தினர் மாளிகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத காரணத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வி.ஐ.பிக்கள் விருந்தினர் மாளிகைக்கு வருவதில்லை, தங்குவது இல்லை.  ஆனால் விருந்தினர் மாளிகையில் பொறுப்பாளர் உதவி பொறியாளர் பாண்டியராஜன் 10 வருடமாக அங்கேயே இருப்பதால், அமைச்சர், வி.ஐ.பிக்கு தண்ணீர் வாங்கியதாக இலட்சக்கணக்கில் போலி …

Read More »

அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம், இடது கரம் ஆல் இன் ஆல் கோவில்பட்டி அம்பிகா வேலுமணி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக பிராந்தி, விஸ்கி விற்பனை செய்ததாக  கோவில்பட்டி காவல்துறை கைது செய்துள்ளது.  அம்பிகா வேலுமணி சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அம்பிகா …

Read More »

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் – வட்டாட்சியர்கள் வில்சன் – ஸ்ரீதர் கூட்டணியின் 10,000 போலி பட்டா மேளா… 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி பகுதிக்கு மட்டும் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியராக விஜயலட்சுமி இருந்த வரையில் கொடுக்கப்பட்ட பட்டாக்களை கணனியில் பதிவு செய்து முறைப்படுத்தினார்.  தனிவட்டாட்சியராக இருந்த வில்சனும், தற்போது தனி வட்டாட்சியராக இருக்கும் ஸ்ரீதரும் புரோக்கர் சங்கத்தின் தலைவர் ராஜாராம் தலைமையில் செயல்படும் முருகேசன், வெற்றி, செந்தில், குமார், கண்ணன், குட்டி தயாளன், ஜீவானந்தம், கோகுல் உள்ளிட்ட 12 பேர் புரோக்கர்களாக வலம் வந்தார்கள்..  மேய்க்கால் …

Read More »

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்- புரோக்கர்கள் பிடியில் மக்கள்..போலி பட்டா – குவியும் கோடிகள்..குறட்டைவிடும் விஜிலென்ஸ் அதிகாரிகள்

சென்னை ஆவடியில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ள நோட்டைவிட போலி பட்டா அதிகமாக கொடுக்கப்படுகிறது. தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், கோடிகளில் வலம் வருகிறார்.   கோயில் பதாகை, திருமுல்லை வாயில், பருத்திப்பட்டு, விளிஞ்சிபாக்கம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, தண்டுரை, சேக்காடு, பாலேரிபட்டு, உள்ளிட்ட பல கிராமங்களில் டவுன் சர்வே செய்து, செட்டில் மெண்ட் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.  தனி வட்டாட்சியர் ஸ்ரீதர் அவர்களிடமோ, அலுவலகத்திலோ மக்கள் மனு கொடுத்தால், ஏதாவது …

Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் போலி பில்கள் மூலம் முறைகேடுகள் நடந்து வருகிறது.  திருவண்ணாமலை, நீலகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதே போல் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகளில் …

Read More »

நெஞ்சார்ந்த நன்றி…

அதிமுக அரசின் பல ஆயிரம் கோடி ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால், பழி வாங்கும் நோக்கத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. வேலுமணி அவர்களின் தூண்டுதலின் பேரில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியருமான என் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. என் மீது பொய் வழக்கு போட்டவுடன், பத்திரிகை சுதந்தரத்தை காப்பாற்ற வேண்டும் …

Read More »

ஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு…மக்கள்செய்திமையத்தின் புகாரை ஏன் விசாரிக்கவில்லை..மூத்த அமைச்சருக்கு தொடர்பா…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கிராம மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்..100க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.. பலர் ஊனமானார்கள்..   ஸ்டெர்லைட் நிர்வாகம் பலியான குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பல இலட்சங்களை அள்ளி கொடுத்தது.இதை ஏன் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.  ஸ்டெர்லைட் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கொடுத்த 15.12.18ம் தேதி இரவு முழுவதும் ஸ்டெர்லை ஆலை …

Read More »