Breaking News
Home / பிற செய்திகள் (page 4)

பிற செய்திகள்

ஆவடி மாநகராட்சி= ஆணையர் நாராயணன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்.. Mr முகப்பேருக்கு ரூ50 இலட்சம் இலஞ்சம்…

     ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி தொகுதி அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்  அமைச்சர் மா.பாண்டியராஜன் உடன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தினமும் பிரச்சாரமே செய்கிறார்.   இது தொடர்பாக ஆதாரங்களுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. தேர்தல் ஆணையம் உடனடியாக ஆவடி மாநகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து நாராயணனை விடுவிக்குமாறு,  நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்பியது. ஆனால்  நகராட்சி நிர்வாக  ஆணையர் …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. மறக்க முடியுமா.. இவர்களுக்கா மீண்டும் வாக்கு..சிந்திப்பீர்.. சிந்திப்பீர்..

தூ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பலியானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துப்பாக்கி சூட்டை, டிவியில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என்று அண்ட…புளுகு..ஆகாச புளுகு…சொன்னா..அதிமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா…

Read More »

மதுரவாயல் தொகுதி.. ஆமை வேகத்தில் திமுக கணபதி- அசுர வேகத்தில் பெஞ்சுமின்..

மதுரவாயல் சட்டமன்றத் தொதியில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளராக அமைச்சர் பெஞ்சுமினும், திமுக கூட்டணி வேட்பாளராக கணபதியும், அமமுக வேட்பாளராக லக்கி முருகனும் போட்டியிடுகிறார்கள்..மும்முனை போட்டியில் திமுக ஆமை வேகத்தில் செயல்படுகிறது.   அதிமுக வேட்பாளர் அமைச்சர் பெஞ்சுமின் 2001 திருவேற்காடு பேரூராட்சித் தலைவர் தேர்தலில் இந்து ஆதி திராவிடர் என்று போட்டியிட்டாலும், தற்போது கிருத்துவ, பிறப்படுத்தப்பட்டவராக போட்டியிடுகிறார். மேலும் தமிழகம் முழுவதும் 28.03.2021 அன்று பெரும்பாலான தேவலாயங்களில் …

Read More »

தாம்பரம் தொகுதியில்- TN 11 H 9898 அரசு வாகனத்தில்- வாக்காளர்களுக்கு பணம்..

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, கோடிக்கணக்கில் பணம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் உள்ள அரசு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.  தாம்பரம் நகராட்சியில் ரூ15 இலட்சத்துக்கு போலி பில் போட்டு, அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சின்னையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அந்தந்த நகராட்சியில் அந்த பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அல்லது அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ரூ10 இலட்சம் முதல் ரூ20 இலட்சம் வரை …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி- விராலிமலை வீரபாண்டி வீட்டில்- வருமான வரித்துறை ரெய்டு… சிக்கிய பல லட்சம் & ஆவணங்கள்…

    புதுக்கோட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் உதயகுமார் இருவரின் பினாமி விராலிமலை அம்மன் கோயில் குடியிருக்கும் வீரபாண்டியன் வீட்டில்  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, ரூ10கோடி பணம் வைத்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.   வருமான வரித்துறையின் சில கருப்பு ஆடுகள், அமைச்சர் விஜயகுமாருக்கு ரெய்டு தகவலை, லீக் செய்தார்கள், ஆனால் வருமான வரித்துறை இணை இயக்குநர் அனுராதா அதிரடியாக வீரபாண்டியன் வீடு உள்ளிட்ட சில …

Read More »

அதிமுக அரசின்- சானிடரி நாப்கின்- ரூ44.15கோடி ஊழல்..

அதிமுக அரசில் எந்த பக்கம் பார்த்தாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுதான்.  சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சானிடரி நாப்கின் பெயரில் போலி பில் போடப்பட்டு, கோடிக்கணக்கில் ஊழல் நடந்து வருகிறது.  சட்டமன்றத்தில் கிராமபுர வளரும் இளம் பெண்களுக்கு இடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால தன் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டம் ரூ37.47 கோடி செலவில் …

Read More »

பூந்தமல்லி நகராட்சி- இலஞ்சம் வாங்கப்படும்- நமது சின்னம் மாம்பழம்.. ரவிச்சந்திரன் ஆணையர்..

     திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன், தன் இருக்கைக்கு பின்னால் இலஞ்சம் வாங்கப்படும் என்று போர்டு வைக்கவில்லை, அவ்வளவுதான்..   பூந்தமல்லி நகராட்சி அலுவலகம், அதிமுக கூட்டணியின் பாமக தேர்தல் அலுவலகமாக மாறிவிட்டது. அதனால் பொது மக்கள், பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்துக்கு நுழைய முடியாமல் தவிக்கிறார்கள்.  பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மேலாளர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் …

Read More »

மதுரை – அமைச்சர் தொகுதிகளில்- நகராட்சி வாகனத்தில் வாக்காளர்களுக்கு பணம்- குறியீடு உள்ள ரூ100/- நோட் கொடுத்தால் ரூ2000/-

மதுரை மாவட்டத்தில் அமைச்சர்களின் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு குறியீடு உள்ள ரூ100/- நோட் கொடுக்கப்பட்டு வருகிறது. குறியீடு உள்ள ரூ100/- நோட்டை கொடுத்தால் ரூ2000 கிடைக்கும்..   குறியீடு உள்ள ரூ100/-நோட் கடந்த இரண்டு நாட்களாக, பிரச்சாரத்தின் போது,வீடு, வீடாக கொடுக்கப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் சட்டமன்றத்  தொகுதி அமைச்சர் உதயகுமார்,  திருப்பரங்குன்றம் ராஜன்செல்லப்பா,  மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி செல்லூர் ராஜூ, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி சதன் பிரபாகர் …

Read More »

மக்கள்செய்திமையம் 73,461 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு முடிவுகள்.. திமுக கூட்டணி 167 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு- அதிமுக 48 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளவர்கள். பட்டியல் 1.4.2021 &2.04.2021 வெளியாகும்..

மக்கள்செய்திமையத்தின்  67  இளைஞர்கள் கொண்ட 16 குழுக்கள் தமிழகம் முழுவதும் குக்கிராமம் முதல் மாநகராட்சி வரை  அமைதியாக, வீட்டுக்கு வீடு, வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேசி, மக்களுடன் கிராமத்து டீ கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டே பேசி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் சுமார் 73461 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 வாக்காளர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.   தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசு, …

Read More »

சென்னை மாநகராட்சி.. வளசரவாக்கம் மண்டலம் பணமூட்டை குவியல்கள் – 94454 77731- செயற் பொறியாளர் சுரேஷ்குமார் சிக்குவாரா?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15மண்டல அலுவலகங்களின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பண மூட்டைகள் குவிக்கப்பட்டு உள்ளது. குவிக்கப்பட்டு  வருகிறது.    வளசரவாக்கம் மண்டலத்துக்கு தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு  மீண்டும் செயற் பொறியாளராக, பதவிக்கு வந்த சுரேஷ்குமாரின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்ட   TN 04 AK 5458 சென்னை மாநகராட்சி  மகேந்திரா வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பண மூட்டைகள் தினமும் பயணம் செய்கிறது. …

Read More »