Breaking News
Home / பிற செய்திகள்

பிற செய்திகள்

தென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா? சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…

கடலூர் மாவட்டம்  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவனூரில் ரூ25.35கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, 20.12.2020ல் காணொலி மூலம் திறக்க, தடுப்பாணையில்  இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் பச்சை கொடி காட்டினார்.  30 நாட்களில் அதாவது 23.01.2021 அன்று எனதிரி மங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது.   பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பை கவனிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் …

Read More »

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதிக்கு மாறாக கட்டிவரும் கட்டிடத்துக்கு தூத்துக்குடி மாநகராட்சி சட்டப்பிரிவு 282(f)(2), 283 மற்றும் 295(f)(b)(c)(2)ன்படி தன்ராஜ் மருத்துவமனை உரிமையாளர் விஜய் தன்ராஜூக்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெய்சீலன் ஐ.ஏ.எஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஆனால் தன்ராஜ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு  அமைச்சர் கடம்பூர் …

Read More »

பல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..

பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் ரூ49,000 பணமும்,  8 கிராம் தங்க காசையும், காரில் தூக்கியெறிந்த போது, சிக்கி பொறியாளர் ரவிச்சந்திரன் பல்லவபுரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  பொறியாளர் பி.வி ரவிச்சந்திரனின் இலஞ்சம் மூலம் கொள்ளையடித்த  சொத்து ரூ200 கோடியை தாண்டும். ரவிச்சந்திரன் மகன்கள் அபினேஷ், அரவிந்த், அருள்செல்வன் மூவரின் புகைப்படங்களுடன் விவரங்கள்…  அபினேஷ்க்கு, இலஞ்ச பணத்தில் வாங்கி கொடுத்த நவீன காருடன்.. …

Read More »

தாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…

  தாம்பரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றும் குமார், தன் மகன் கெளதம் திருமணத்தை ரூ10கோடியில்  மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். 25.1.2021ல் எழும்பூர் ராஜா முத்தையா ஹாலில் வரவேற்பு நடக்கிறது.  நகரமைப்பு ஆய்வாளர் குமார், தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் பணியில் சேர்ந்தாலும், தாம்பரம், பல்லவபுரம், அம்பத்தூர், மாதவரம், ஆவடி, மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளில் மட்டுமே, நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.  தாம்பரம் நகராட்சியில் படப்பையிலிருந்து வந்து பணியாற்றும் செல்விதான் …

Read More »

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..

 நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 22.01.2021 பிற்பகல் 12மணி அளவில் தமிழகம் முழுவதும் நகராட்சி ஆணையர்கள், நகராட்சி பொறியாளர்கள், மண்டல பொறியாளர்கள், மண்டல துணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.  நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 12 சதவிகிதம் கமிசன் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வாய் மொழி உத்தரவாக கூறப்பட்டதால், 12 சதவிகிதம் கமிசன் கணக்கு வழக்கு பார்த்து, பெறப்பட்டது.(சட்டமன்றத் தேர்தல் வருவதால், …

Read More »

கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…

அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவுக்காக 01.09.2020 முதல் 31.01.2021 வரை  செலவிடப்பட்ட/செலவிடப்படும் தொகை ரூ48.82கோடி…  கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு கொடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் முதல் மிகவும் குறைந்துக்கொண்டே உள்ளதாக, கொரோனா தொடர்பாக, சுகாதாரத்துறை தினமும் வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் கொரோனா …

Read More »

சென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…

சென்னை மாநகராட்சி மண்டலம் -5 செயற் பொறியாளர், சனிக்கிழமை கழுகு லாரன்ஸின் ஊழல் பயோ-டேட்டா.. மண்டலம் -5 செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் மார்வாடி பகுதியில் 5400 அப்ரூவல் இல்லாத கட்டிடங்கள், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் உள்ளது. 5400 கட்டிடங்களுக்கும் மாதா, மாதம் மாமூல் வாங்கி, தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுப்பதுதான் முக்கிய பணி. லாரன்ஸின் சொத்து மதிப்பு ரூ100கோடியை தாண்டும்..சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் …

Read More »

ஆவடி மாநகராட்சி.. 05.01.2021 விஜிலென்ஸ் ரெய்டு… இன்று 15 வது நாள்….

ஆவடி மாநகராட்சியில் 05.01.2021அன்று நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் புரோக்கர் வின்சென்ட் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கணக்கு அதிகாரி திலகம் கழிப்பறையில் ரூ50,000த்தை தூக்கியெறிந்த போது சிக்கினார். சுகாதார அதிகாரி மோகன், ஆட்டோ ஸ்டாண்டில் ரூ2 இலட்சத்தை தூக்கியெறிந்தார். அதில் ஒரு இலட்சம் மட்டுமே விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்..  விஜிலென்ஸில் சிக்கிய சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி, அலுவலகம் வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய வீரபத்ரன், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டார வள அலுவலர் விஜயலட்சுமி மூவர் அணியின் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.   உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உதவியாளராக இருந்த வீரபத்ரன், உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல் கோப்புகளை நகல் எடுத்து வைத்துள்ளேன். ஏற்கனவே வருமான வரித்துறைக்கு சில ஊழல் கோப்புகளை …

Read More »