Breaking News
Home / mani bharathi

mani bharathi

முதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…

 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறையிலிருந்து அளிக்கப்பட்ட ரூ8.50கோடி திருப்பி அளிக்க, முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் படி ரூ8.50 கோடி திருப்பி காவல்துறை அளிக்கப்பட்டது. ஆனால் ரூ8..50கோடியில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.. ஏன்?.. என்னாச்சு ரூ8.50கோடி…   முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து யார்.. யாருக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நிதித்துறை செயலாளராக இருந்த நாராயணன் ஐ.ஏ.எஸ் 29.07.1991ல் நிதித்துறையிலிருந்து கடிதம் அனுப்பி வெளியிட்டுள்ளார்( Letter No.68299/Finance(CMPRF)/91-1 dated …

Read More »

ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து சட்ட விரோதமாக, 2.08 கோடி ரேசன் கார்டுகளில் உள்ள 6.74 உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்து  விலை இல்லாமல் கொடுக்க ரூ28கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆகஸ்டு மாதம் இறுதியில் ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, செப்டம்பர் 5ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியை, தமிழகம் …

Read More »

சென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…

சென்னை மாநகராட்சியின் துக்ளக் தர்பார் நிர்வாகத்தைவிட மிகவும் மோசமாகிவிட்டது. ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் நிர்வாகம் கோமாளி நிர்வாகம் என்பதில் சந்தேகம் இல்லை.  விஜபி பகுதிகள் உள்ளடங்கிய மண்டலம் -5ல் இராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலை  மிகவும் மோசமாக உள்ளது. மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் (E-Toilet) …

Read More »

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் என்று  மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை கட்டிடத்தை  திறந்து வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவுக்கே சவால் விட்டுள்ளார். டாக்டர் அரசிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆசி இருப்பதால் முதல்வர் அலுவலகமும் கண்டுகொள்ளவில்லை.  திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்  கல்லூரி …

Read More »

தமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் நிர்வாகம் துக்ளக் தர்பார் நிர்வாகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், திமுக ஆட்சியில் நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய போது, தன் மச்சான், தம்பி மனைவி  மற்றும் உறவினருக்காக 20க்கு மேற்பட்ட பணியிடங்களை உருவாக்கி நியமித்தார். சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமித்த 20 பேரும், பணி இல்லாமல், சம்பளம் வாங்கிக்கொண்டு  வெட்டி பொழுதை கழிக்கிறார்கள். 24.10.2020 இரவு …

Read More »

சென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…

சென்னை மாநகராட்சி முழுவதும் சென்னை மாநகராட்சியின் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் டூபாக்கூர் கொரோனா ஆய்வுக் கூடம் நடத்தி, மிரட்டி அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சென்னை மாநகராட்சி மண்டலம் -10ல் 70 வயதான தம்பதியரிடம், உங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. உங்களுக்கு கொரோனா ஆய்வு எடுக்க வேண்டும் என்று டூபாக்கூர் லேபிலிருந்து வந்த மூன்று பேர் (ஒருவர் சீனிவாசன் மாநகராட்சி ஊழியர்) …

Read More »

கொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

   கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், 3 அடி முதல்  6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, பேசுவது போல், நடிகர், நடிகைகளை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து, விளம்பரம் செய்கிறது தமிழக அரசு.  கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவசரச் சட்டமும் கொண்டு …

Read More »

புதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..

   புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாமக்கலில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜஹாங்கிர் பாஷா புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணி மாறுதலில் வந்தார்..  புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பதவியேற்றவுடன் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் நிறுவனமான மதுரை மீனாட்சி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய  பல லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது..  மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால்  கடைகள் மூடப்பட்டு கிடந்தது. வணிகர்கள் …

Read More »

நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…

அசிங்கம்..அசிங்கம்.. அலுவலத்திலேயே விபச்சாரமா என்று அலறியபடி  20.10.2020 மதியம் 3மணியளவில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் அறையிலிருந்து ஒடி வந்தார் ஒரு அதிகாரி. நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகமே பரபரப்பானது. அரை நிர்வாண கோலத்தில் அய்யா, நந்துவுடன் என்று வார்த்தை முடிக்க முடியாமல் புலம்பினார். சில நிமிடங்களில் அசடு வழிந்தபடியே திருமாவளவன் அறையிலிருந்து நந்து வெளியே வந்தாள்..   யார் நந்து..  நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தை …

Read More »

சென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா?…

மத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பணிகள் நடக்கவில்லை. 2016-17ல்  ERSS திட்டத்தில் ரூ965.58 இலட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது, அதில் 42 மாதங்கள் கடந்தும், ரூ600இலட்சத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட சான்றிதழ் மத்தியச் அரசுக்கு அனுப்பி உள்ளது.  மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் …

Read More »