528 பேரூராட்சிகளிலும்- Prematix software நிறுவனத்தால்- கும்முடிபூண்டியில் தொடங்கி ரூ60கோடி முறைகேடு

  தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 528 பேரூராட்சிகளிலும் வரி வசூலித்தல் மற்றும் கணக்குகள் பராமரித்தல் பணிகளை 2013-14 முதல்  எந்த விதி அரசாணையும் இல்லாமல் Prematix software solution என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  528 பேரூராட்சிகளிலும், பேரூராட்சிகளில் பணியாற்றும் கணனி ஊழியர்கள், வரி வசூலை Prematix software solution அமைத்துள்ள சாப்ட்வேரில் பதிவு செய்து, பில் கொடுக்க முடியும். வரி வசூலில் பேரூராட்சி அலுவலர்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆனால் Prematix software solution நிறுவனத்தின் ஊழியர்கள் நினைத்தால், ஒசூரில் உள்ள அலுவலகத்திலிருந்தபடியே வரியில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்ய முடியும். கட்டிய வரியை, கட்டாமல் மாற்ற முடியும், கட்டாத வரியை கட்டியதாக மாற்றம் செய்யும் முடியும். பேரூராட்சி தனி அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், வரி குறைக்க, அதிகரிக்க முடியும்..

 528 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளின் விவரங்கள், Prematix software solution நிறுவனம் அரசுக்கு தெரியாமல் யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியும்.. இதனால் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்.

  Prematix software solution நிறுவனத்தின் சாப்ட்வேரால் திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி பேரூராட்சியில் 2015-16ஆம் ஆண்டில் லைட்னர் ஸ்ரீராம் மேனு பேச்சரிங் பிரைவேட் லிமிட், ஹிங்சங் பெட்ரோ கெமிக்கல் பிரைவேட் லிமிட், பெசிலிட்டி மேனேஜ்மண்ட் என்ற நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ3,28,241/-, ரூ3,17,800/- மற்றும் 31,451 தொழில் வரி காசோலைகள் பெறப்பட்டுள்ளது. இந்த காசோலைகளை  600 தனி நபர்களின் சொத்து வரிக்கு கணனி கேட்பில் காண்பித்து ரூ6.70இலட்சம் நேர் செய்யப்பட்டுள்ளது. 600 தனி நபர்கள் சொத்து வரி செலுத்தாமல், சொத்து வரி செலுத்தியதாக கணக்கில் உள்ளது.  இதனால் கும்முடிபூண்டி பேரூராட்சி ரூ6.70இலட்சம்  வருவாய் இழப்பு.  கும்முடிபூண்டி பேரூராட்சி கணனி ஆபரேட்டரும்,  Prematix software solution நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்த முறைகேட்டை நடத்தியுள்ளது.

 இது போல் தமிழகத்தில் உள்ள 400 பேரூராட்சிகளில் இதே போல் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் பேரூராட்சிகளின் நிர்வாகத்திற்கு ரூ60கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 528 பேரூராட்சிகளிலும் Prematix software solution முறைகேடுகளை ஆய்வு செய்தால் ரூ100கோடி வரை இழப்பு உறுதியாகும்.

 இந்த மெகா ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை…

                             ஊழல் வாழ்க… ஊழல் வளர்க…

 

 

 

Comments

comments