525 பேரூராட்சிகளில்-பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து ஊழல்-அதிகாரிகள் வீட்டில் பண மழை..

 

தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டாலே  பேரூராட்சிகள், நகராட்சிகளில் அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்..அக்டோபர் முதல்ச்  ஜனவரி மாதம் வரை நான்கு மாதங்களில் பல லட்சம் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து கொள்முதல் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு என்ற பெயரில் லட்சக்கணக்கில் போலி பில் போட்டுவிடுவார்கள்..

 பேரூராட்சிகளில் ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் ஆண்டியூர், ஊத்தங்கரை பெயரில் போலி பில் போடப்பட்டு வருகிறது. ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் பெயரில் ரூ9000க்குள் போலி பில் போடுவார்கள்..

 பிளீச்சிங் பவுடர் ஒரு கிலோ ரூ41 என 175கிலோ விலை ரூ7175 வரிகளுடன் ரூ8453/- கொசு மருந்து லிட்டர் ரூ2150/-  என 3.50 லிட்டர் விலை ரூ7525 வரிகளுடன் ரூ8825/- மற்றும் சுண்ணாம்பு தூள், பினாயில் என எல்லாம் ரூ9000/-க்குள் ஸ்ரீ பர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் பெயரில் பில் கொடுப்பார்கள். ஆனால் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து, சுண்ணாம்பு தூள், பினாயில் சப்ளை செய்ய மாட்டார்கள்..

 ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸ் பில் கொடுத்தவுடன், 525 பேரூராட்சிகளின் தனி அதிகாரி பணம் பட்டுவாடா செய்துவிடுவார்..சராசரி நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ25000/-க்கு ஸ்ரீபர்வதம் கெமிக்கல் பில் கொடுத்து, பணம் வாங்கிவிடுவார்கள்..

 இந்த போலி பில் பணம் உதவி இயக்குநர் பேரூராட்சி முதல் இயக்குநர் பேரூராட்சிகள் நிர்வாகம் வரை செல்லும்..

 சின்ன கணக்கு போட்டு பாருங்கள்…ரூ25,000X525= ரூ1,31,25,000/-(ரூ1.31கோடி) நான்கு மாதங்களில் போலி பில் ஊழல் ரூ6கோடிதான்..

 இதை தவிர ஸ்ரீபர்வதம் கெமிக்கல் ஒர்க்ஸின் கொசு புகைப்போக்கி  இயந்திரம் பெயரில் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் பல லட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது. கொசு புகைப்போக்கி இயந்திரம் சப்ளை செய்துவிட்டு, 2 அல்லது 3 கொசு புகைப்போக்கி இயந்திரம் சப்ளை செய்ததாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவருகிறது…

 நகராட்சிகளில், பேரூராட்சிகளில் மழைக்காலங்களில் பளீச்சிங் பவுடர், கொசு மருந்து, சுண்ணாம்பு தூள், பினாயில், கொசு புகைப்போக்கி இயந்திரம் கொள்முதல் செய்து, பயன்படுத்தப்பட்டு இருந்தால் டெங்கு காய்ச்சலில் ஒருவர் கூட பலியாக மாட்டார்கள்..

  மனசாட்சியே இல்லாத அதிகாரிகள் பிடியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது…           

 

Comments

comments