30.6.2001 நள்ளிரவில் கலைஞர் கைது…26.4.2017 பத்திரிகையாளர் அன்பழகன் கைது.. எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை…

30.6.2011ம் தேதி நள்ளிரவு 1மணியளவில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த போது, சென்னை காவல்துறை ஆணையர் முத்துகருப்பன் ஐ.பி.எஸ்[ஒய்வு],  போலி முத்திரைத்தாள் ஊழல் புகழ் முகமது அலி ஐ.பி.எஸ்[ஒய்வு] தலைமையில் சென்ற காவல்துறை அதிகாரிகள் பலவந்தமாக கைது செய்து, சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்தார்கள். அப்போது மத்தியமைச்சராக இருந்த முரசொலி மாறனை  உள்ளாடையுடன் போலீஸ் அதிகாரிகள் தூக்கி எறிந்தார்கள். இந்த சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  முரசொலி மாறன், பின்னால் இறப்புக்கு காரணமாக இருந்தது…

  மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான அன்பழகன், பூந்தமல்லியில் வீட்டுக்கு அருகே மண் சாலையில் இன்சூலின் வாங்கிக்கொண்டு கைலியுடன் நடந்து வந்த போது, 26.4.17ம் தேதி காலை 8.35மணிக்கு  மூன்று இனோவா காரில் கோவையிலிருந்து வந்த 12 போலீசார் பலவந்தமாக காரில் கடத்தி சென்றார்கள் 10மணி நேரம் கழித்து கைது செய்திருப்பதாக அறிவித்தார்கள்…அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்..

  பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக முகநூலில் செய்தி பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை மாநகர காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டு, எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

 சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நாட்கள் பல கடந்துவிட்டது. மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்ட பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகரும் கலந்து கொண்டார். மத்தியமைச்சரை சந்தித்து 10 நிமிடம் பேசுகிறார்..

  இந் நிலையிலும் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படவில்லை…

   கஞ்சா கடத்தும், பட்டினபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், அவருக்கு உடந்தையாக இருக்கும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் இருவருக்கு விருது வழங்கப்படுகிறது..

    திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது… மூத்த பத்திரிகையாளர் அன்பழகன், காரில் கடத்தப்பட்டு, கைது…

  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், நடிகர் எஸ்.வி. சேகரை சென்னை மாநகர காவல்துறை ஏன் கைது செய்யவில்லை…

 எச்சில் துண்டு பிடியை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்த  ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசுக்கு இணையான காவல்துறை என்று சென்னை மாநகர காவல்துறை என்று மார்த்தட்டி கொள்வது எந்தவிதத்தில் நியாயம்…

Comments

comments