22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்

தமிழக அமைச்சர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணியில் அமைச்சர்கள் கொடுக்கல், வாங்கல் பணிகளை கவனிக்க தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பது வழக்கம்.. ஆனால் தற்போது இளநிலை நேர்முக உதவியாளர் பணிகளில் அரசு பணியில் இல்லாத  தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து உள்ளார்கள்..

 மாண்புமிகு அமைச்சர்கள் நியமித்துள்ள வெளியாள் பட்டியல்..

 1. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் – எஸ்.ரமேஷ்
 2. அமைச்சர் திண்டுக்கல் சீனிவசான் – ஏ.எம்.நாகேந்திரன்
 3. உள்ளாட்சித்துறை அமைச்சர் – சந்தோஷ்குமார்
 4. அமைச்சர் ஜெயக்குமார் – ஜெனிப்
 5. அமைச்சர் அன்பழகன் – பொன்னுவேல்
 6. அமைச்சர் சம்பத் – குமார்
 7. அமைச்சர் கருப்பண்ணன் – தீபன்
 8. அமைச்சர் காமராஜ் – பாரதிதாசன்
 9. அமைச்சர் ஒ.எஸ்.மணியன் – பசுபதி
 10. அமைச்சர் விஜயபாஸ்கர் – அன்பானந்தன்
 11. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – பாபுராஜ்
 12. அமைச்சர் கடம்பூர் ராஜூ – சுந்தரகிருஷ்ணன்
 13. அமைச்சர் உதயகுமார் – பொன்னாங்கன்
 1. மைச்சர் வீரமணி – சீனிவாசன்
 2. அமைச்சர் செங்கோட்டையன் – கதிர்முருகன்
 3. அமைச்சர் நடராசன் – சுந்தர் கணேஷ்
 4. அமைச்சர் நிலோபர் கபில் – பிரகாசம்
 5. அமைச்சர் விஜயபாஸ்கர்(கரூர்) – கார்த்திகேயன்
 6. அமைச்சர் மணிகண்டன் – சண்முகபாண்டியன்
 7. அமைச்சர் திருமதி ராஜலெட்சுமி – ஆறுமுகம்
 8. அமைச்சர் மா.பாண்டியராஜன் – ஞானம்
 9. அமைச்சர் திருமதி வளர்மதி – செந்தில்நாதன்

   தமிழக அமைச்சரவைகளில் உள்ள 33 அமைச்சர்களில் 22 அமைச்சர்கள்  இளநிலை நேர்முக உதவியாளர் என்ற பணியில் அரசு பணியில் இல்லாத, வெளியாளை நியமித்துள்ளார்கள்..

  இளநிலை நேர்முக உதவியாளர் பணிக்கு, வெளியாளை நியமிக்க, தமிழக அரசின் பொதுத்துறை எப்படி அனுமதித்தது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

 

 

Comments

comments