2011ல் சொன்னதை செய்யாத எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் 2016ல் மீண்டும் உங்களிடம் வருகிறார் – விரட்ட வேண்டாமா?

20160407_07225920160407_073714

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி வேட்பாளராக 3வது நபராக அறிவிக்கப்பட்டவர் தற்போதைய எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதி ஏதாவது ஞாபகம் உள்ளதா என்று செல்லப்பாண்டியனிடம் கேட்டால் ஒன்று கூட ஞாபகம் இருக்காது. ஏன் என்றால் அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் மறந்து விடுவார்கள். ஆனால் கோடீஸ்வரனாக மாறுவதை   மட்டும் தான் சிந்திப்பார்கள். 2011ல் கொடுத்த வாக்குறுதியில் முக்கியமானது குடிநீர் பிரச்சனை தான் திமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. என்னை (செல்லப்பாண்டியன்) வெற்றி பெற வைத்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி அம்மா (ஜெயலலிதா) தலைமையில் ஆட்சி அமைந்த 6 மாதத்திற்குள் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்வழங்கப்படும். அதன் பிறகு தினசரி குடிநீர் தொகுதி மக்களுக்கு  வழங்கப்படும் என்று போல்பேட்டையில் செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிக்கும் போது மக்கள் மத்தியில் பேசினார். தேர்தல் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று  5 வருடம் எம்.எல்.ஏவாகவும், 2 வருடத்திற்கு மேல் தமிழக அமைச்சராகவும் இருந்த செல்லப்பாண்டியன் குடிநீர்  பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை. இன்றைக்கு தொகுதி மக்கள் குடிநீர் எப்ப வரும் என்று இரவு முழுவதும்  தூங்காமல் காத்துகிடந்து குடிதண்ணீர் வரும் வால்வை திறந்தால் காற்று தான் வருகிறது. தற்போது 8 முதல் 11 நாட்கள் ஒரு முறை தான் குடிநீர்வருகிறது.

20160409_10595720160409_110003  சொன்தை செய்யாத எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் மீண்டும் உங்களை சந்திக்க வரும் போது குடிநீருக்காக நீங்கள் பட்ட துன்பத்தை காட்டுங்கள். 2014ல் மேயராக பதவியேற்ற அந்தோணிகிரேஸ் அப்போது வேட்பு மனுவில் காண்பித்த சொத்துப்பட்டியலை இப்போது உங்கள் சொத்து பட்டியலை வாசித்தால் தலை தான் சுற்றுகிறது. தேர்தல் வரும் போதெல்லாம் கட்சி தொண்டர்களை உசுப்பு எற்றி  அவர்களின் உழைப்பில் வெற்றி பெற்ற பின்பு 5  வருடம் தொண்டனை நினைத்து பார்ப்பது கிடையாது. மேலும் பல இடையூறுகளில் செயல்பட்ட வரும் தாலுகா அலுவலகம் புதியதாக வேறு இடத்தில் (டூவிபுரம்) அமைக்க அப்போதைய திமுக ஆட்சியில் வருவாய்த்தறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி இதற்கான ஆணை வெளியிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை 5 வருடத்தில் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த செல்லப்பாண்டியன் செய்தாரா? ஏன் செய்யவில்லை?

  சங்கரப்பேரி பகுதியில் முந்தைய திமுக ஆட்சியில் (தற்போதைய மாநகராட்சி பகுதி) சமூகநலத்துறை அமைச்சராக இருந்த தொகுதி.  எம்.எல்.ஏ என்ற முறையில் செல்லப்பாண்டியன் ஏன் அமைக்க  முன்வரவில்லை? ஏன் மனமில்லை? தூத்துக்குடி தொகுதி மக்கள் தினசரி போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ , மாணவிகள் பொதுமக்கள் சிக்கி தவித்து வரும் 1ம் கேட், 2ம் கேட் சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்ட பின்பும் ஏன் பணியை துவக்க முன் வரவில்லை. எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் 5 வருடம் எங்கே சென்றார். 20 பங்குகளை கொண்ட பெரிய டைரக்டராக இருக்கும் காய்கறி மார்க்கெட் பகுதியில் தினசரி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதை அடுத்து அதற்கு தீர்வு காணும் வகையில் முன்பு எஸ்.பி.யாக் இருந்த ராஜேந்திரன் ஐ.பி.எஸ் அதற்கு தீர்வு செய்தார். பின்பு எஸ்.பி.மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக வந்த துரை ஐ.பி.எஸ்யிடம் பேசி போக்குவரத்தை மாற்றி பழைய மாதிரி தற்போது வரை போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி தனக்கும், தன் குடும்பத்திற்கும் சாதகமாக இருந்த எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் வாக்களித்த தொகுதி மக்களின் நன்மையை ஏன் மறந்தார்.

   எம்.எல்.ஏ  செல்லப்பாண்டியன்? வாக்களித்து எம்.எல்.ஏவாக்கிய செல்லப்பாண்டியன் அமைச்சராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்வு. ஒரு நபர் அரசு தொடர்பாக  ஒப்பந்தம் கேட்டு அது தொடர்பான ரோல் நம்பரை செல்லப்பாண்டியனிடம் கொடுத்தார். மறுநாள் தன் உதவியாளர் மூலம் செல்லப்பாண்டியன் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு போன் செய்து ரோல் நம்பரை கூறி உடனடியாக வேலைக்கான ஆர்டர் போடும் படி உத்தரவிட்டார்.  ரோல் நம்பரை ஆட்சியரிடம் கூறவேண்டும். ஆனால் வேலைவாய்ப்பு அதிகாரியிடம் கூறிய கதை பின்னணி வேறு! அந்த விவகாரத்திற்குள் இப்போது நாம் நுழைய விரும்பவில்லை.  மூன்று முறை தூத்துக்குடி வந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்த திட்டமான விவிடி சிக்னல் மேம்பாலம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 5 வருடத்தில் ஆரம்பகட்ட பணிகளை துவக்க கூட ஏன் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. எம்.எல்.ஏ  செல்லப்பாண்டியன், முதல்வரின் சிறப்புத்திட்டமான 4வது பைப் லைன் பணியை உடனடியாக முடித்து வாக்களித்த தொகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க என்றைக்காவது .செல்லப்பாண்டியன் அந்த பணியை பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள ஏன் முன்வரவில்லை.

20160407_071614

  இ.எஸ்.ஐ(தொழிலாளர்களுக்கான மருத்துமனை) மருத்துவமனை  அமைக்க எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் ஏன் முயற்சி செய்யவில்லை. தொகுதியில் பல ரோடுகள் இன்று வரை பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாத வகையில் இருக்கிறது. இதனை என்றைக்காவது பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தாரா என்று எம்.எல்.ஏ செல்லப்பாண்டியனிடம், மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். 2011ம் ஆண்டுக்கு பின்பு எம்.எல்.ஏ ஆகி அமைச்சராக இருந்த செல்லப்பாண்டியன் வாங்கி குவித்த சொத்துக்கள் பட்டியலை பத்திர நகலுடன் மே 10ம் தேதி மக்கள் செய்தி மையம் சார்பில் புத்தகமாக  வெளியிட உள்ளோம். 5வருட சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு வருடத்திற்கு மேல் அமைச்சராகவும் இருந்த செல்லப்பாண்டியன் எதுவும் செய்யாமல் வாக்களித்த மக்களை மறந்துவிட்டு தன் பண பலத்தாலும், அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர்  மூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தலைமையின் உத்தரவின் பேரில் சில உதவிகளை செய்தார். அதன் அடிப்படையில் தான் மீண்டும் 2016ல் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

   மீண்டும் உங்களை சந்திக்க செல்லப்பாண்டியன் வரும் போது கடந்த முறை 2011ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி கேட்க வேண்டும். பாளைரோட்டில் முன்பு ஆட்சியராக இருந்த ஆஷிஷ்குமார் ஐ.ஏ,எஸ் பல மாடி கட்டிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். சில  பகுதிகளுக்கு பின்பு தன் உறவினருடைய மோட்டார் வாகன நிறுவனம் கட்டிடமும், மில்லாபுரம் சர்ச் அருகில் தன் உறவினர் வீடு இருப்பதாலும் இடித்த கட்டிடங்களுக்கு பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் செல்ல்பாண்டியன் பார்த்துக்கொண்டார். அப்படியென்றால் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு செல்லப்பாண்டியன் பொறுப்பு ஏற்பாரா?

images

அதுபோல தூத்துக்குடி நாசரேத் டயோசிசனில் எஸ்.டி.கே ராஜன் அணியில் இருந்து வரும் செல்லப்பாண்டியன் தன் சில தவறான நடவடிக்கையால் இன்றைக்கு செல்லப்பாண்டியன் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகளை எழுந்துள்ளது. இவர்கள் செல்லப்பாண்டியனுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    மக்கள் செய்தி மையம் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கிடையாது. தற்போது அதிமுக வேட்பாளர் அறிவித்துள்ளதால் அவருடைய பின்னணியை வெளியிட்டுஉள்ளோம். திமுக மற்றும் மக்கள் நல கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்பு அவருடைய பின்னணியை வெளியிடுவோம்.

மக்கள்செய்திமையம் 11.4.16 மதியம் 3மணி

 

 

 

Comments

comments