18 எம்.எல்.ஏக்கள்-தகுதி நீக்கம் செல்லும்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு-டி.டி.வி தினகரன் அதிரடி முடிவு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் 18 எம்.எல்.ஏக்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 18 எம்.எல்.ஏக்களும், உயர்நீதிமன்றத்தின் தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் அமர்வு வழங்கிய தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதியரசர் சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கினார்கள். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம்  மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்தது. நீதியரசர் சத்தியநாராயணன் வழக்கு விசாரணைக்கு பின்பு ஆகஸ்டு 31ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 இன்று(25.10.18) காலை நீதியரசர் சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்களையும், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழங்கிய  தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.

 இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதைவிட, 18 சட்டமன்றத் தொகுதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து 20 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்று எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்க்கலாம் என்று டி.டி.வி தினகரன் ஆலோசனை செய்து வருகிறார்.

 ஆனால் திமுக 20 தொகுதிக்கான இடைத் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை.

  ஆனால் தமிழகத்தில் ஊழல் அதிமுக அரசு கவிழுவதையே வாக்கு அளித்த மக்கள் விரும்புகிறார் என்பதுதான்  உண்மை..

 

 

 

 

Comments

comments