16 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா…அமைச்சர் பன்னீருக்கு கடிதம் …பன்னீர்செல்வம் நிர்வாகம் மோசம்…அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லை…

16 ஆண்டுகளுக்கு முன்பு 2001- 2006ல் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா, 7.3.2002ல் பொதுப்பணித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் ..

தற்போது நமது மாநில அரசின் நெருக்கடியான நிதி நிலைமைப்பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று தொடங்கும் கடிதத்தின் முன்றாவது பாராவில்…உங்கள் துறையை பொறுத்த வரையில் நீங்கள் இந்த பணிக்கு தலையாய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். [உண்மையில் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெரிகிறது] உங்கள் துறையில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துகின்ற அனைத்து திட்டங்களிலும் துறையின் சாதனை குறித்து நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்குகின்ற நிதி நடப்பு ஆண்டில் பெறப்பட்டதை காட்டிலும் 50 சதவிகிதம் கூடுதலாக கேட்டு பெறுவது நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

ஆயினும் சமீப காலமாக மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற பல் வேறு மத்திய திட்டங்களில் முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்குகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தபடாமல் உள்ளது என்பதை அறிந்து நான் மிக்க கவலை அடைந்துள்ளேன்…

ஜெயலலிதாவின் இந்த பாரா ஆங்கில கடிதத்தில் பாருங்கள்…

    I was disturbed to learn that of late in the case of many sponsored and central schemes, funds released by the government of india are not being fully utlised by many departments due to poor planning and tardy implementation.

 I would have been happy if all the departments had spent funds from the government of india fully and asked for further release of funds. I certainly do not relish this indifference on the part of secretaries to government and I expect you to ensure that funds from government of india are not surrendered on any account..

  அனைத்து துறைகளும் மத்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தி மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை பெற்றிருந்தால் நான் அதுகுறித்து மகழ்ச்சி அடைந்திருப்பேன். அரசுச் செயலாளர்கள் மத்தியில் நிலவும் இந்த ஆரோக்கியமற்ற போக்கு குறித்து நான் மிகவும் அதிருப்தி அடைகிறேன். எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசு வழங்குகின்ற நிதி, திருப்பி ஒப்பளிப்பு செய்யக் கூடிய நிலை உருவாகாமல் இருக்க நீங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

என்று முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு  எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்..

 முதல்வர் கடிதத்தில் நான் மிக்க கவலை அடைந்துள்ளேன் என்ற வரிகள் படிக்கும் போது, அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பதவிக்கு லாயக்க இல்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது…

 இப்படி நிர்வாக திறமையற்ற, ஒ.பன்னீர்செல்வம் எப்படி முதல்வராக்கப்பட்டார் என்பதை நினைத்து பார்க்கும் போது, கண்களிலிருந்து உதிரம் கொட்டுகிறது…

  தமிழக வாக்காளர்களே இனியாது… திறமையான, ஊழல், முறைகேடு இல்லாத ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்…

 

 

 

 

Comments

comments