12600 கிராம பஞ்சாய்த்துக்களில் சமூக தணிக்கை பெயரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் பட்டுவாடா? குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்…

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்பியும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து போது, காங்கிரசு நிர்வாகியும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை. பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்..

  100நாள் வேலைத் திட்டத்தை கண்காணிக்க சமூக தணிக்கைத்துறை இயக்குநரகம் உள்ளது. சமூக தணிக்கைத்துறை இயக்குநராக சட்டநாதன் இருந்த வரை நேர்மையாக செயல்பட்டது. தற்போது சமூக தணிக்கைத்துறை இயக்குநர் பதவி காலியாக உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் தியாகராஜன், சமூக தணிக்கைத்துறையின் இணை இயக்குநராக செயல்படுகிறார்.

 சமூக தணிக்கைத்துறை 100நாள் வேலைத் திட்டம் தொடர்பாக வாரா வாரம் குறைந்தது  700 – 800 கிராம பஞ்சாய்த்துக்களில் நடக்கும். ஒவ்வொரு வீட்டிற்கு சென்று பணிக்கான அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதா, வங்கி கணக்குகளில் சம்பளம் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்..

 மக்களவைத் தேர்தல் அறிவித்தவுடன், சமூக தணிக்கையை நிறுத்திவிட வேண்டும். ஆனால் ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் தற்போது மூன்று வாரங்களாக ஒவ்வொரு வாரமும்  மிக வேகமாக 1500 கிராமங்களில் சமூக தணிக்கை நடந்துள்ளது.

 சமூக தணிக்கை பெயரில் வாரா வாரம் 1500 கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள  வாக்காளர்களுக்கு, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா நடப்பதாக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்..கடந்த மூன்று வாரத்தில் மட்டும் சுமார் 4500 கிராம பஞ்சாய்த்துகளில் சமூக தணிக்கை என்ற பெயரில் அதிமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தும் , வாக்காளர்களுக்கு அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா நடந்துள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றது..

 தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ், கிராம பஞ்சாய்த்துக்களில் நடக்கும் சமூக தணிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும்..

 ஆனால் தமிழக தேர்தல் ஆணையம் வழக்கம் போல் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம் பட்டுவாடாவை வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையாக உள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் கூடும் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஏமாற வேண்டாம்.. கிராம பஞ்சாய்த்துக்களில் என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்துங்கள்…

Comments

comments