1.22 இலட்சம் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு…அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் மக்களிடம் போய் சேரவில்லை…கருத்துக் கணிப்பு முடிவு 9.4.19ல் வெளியாகும்..

MAKKAL SEITHI MAIYAM NEWS(PVT)LTD நிறுவனம் 40 இளைஞர்கள்  7 குழுக்களாக தமிழக முழுவதும் குக்கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள  234 சட்டமன்றத் தொகுதிகளிலும்  1,22,697வாக்காளர்களை சந்தித்து 11 நாட்கள் கருத்துக் கணிப்பு நடத்தியது.

எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக- பாஜக கூட்டணி,  திமுக கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளிடையேதான் போட்டி.

 கருத்துக் கணிப்பு முடிவுகளை ஆய்வு செய்து,கணினியில் பதிவு செய்யும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது.

 எடப்பாடி பழனிச்சாமி & ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக வாக்குகள் 50 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு சென்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளின் வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் அளவிற்கு இல்லை.

 எடப்பாடி பழனிச்சாமி & ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசின் ஊழல்கள் மக்களிடம் எதிர்க்கட்சிகள் கொண்டு போய் சேர்க்கவில்லை. அதனால் அதிமுக மக்களவைத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் சில தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

 எதிர்க்கட்சிகள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால், ஊழல் அதிமுக கூட்டணி 39 மக்களவைத் தொகுதியிலும், 18 சட்டமன்றத் தொகுதியிலும் தோல்வி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை..

 மக்கள்செய்திமையத்தின் தமிழக அரசின் முட்டை ஊழல் மற்றும் இலவச மின்சாரத்தில் ரூ15,000கோடி ஊழல் ஆகிய இரு ஊழல் புத்தங்கள்  4000 இலவசமாக மக்களிடம் சேர்த்து உள்ளோம்.

  கே.பி.முனுசாமியின் ரூ100 கோடி ஊழல், பச்சமுத்துவின் நில ஆக்ரமிப்பு, ஒ.பன்னீர்செல்வத்தின் ரூ10,000கோடி ஊழல் உள்ளிட்ட 10  ஊழல் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை புத்தகமாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள்செய்திமையத்தின் இளைஞர் பட்டாளம் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் செய்யும் பணியை மக்கள்செய்திமையம் செய்கிறது..

       கருத்துக்கணிப்பின் முழு விவரங்கள்..9.4.19அன்று வெளியிடப்படும்…

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

நாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..

சென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட …

Leave a Reply

Your email address will not be published.