Breaking News

பொதுப்பணித்துறை- P.S.T Engg.construction V.Satiyamoorthy &co P.S.K Engg Construction- பிளாக் பட்டியலில் வைக்காத மர்மம் என்ன?…

பொதுப்பணித்துறை P.S.T Engg.construction, V.Satiyamoorthy &co.P.S.K Engg Construction உள்ளிட்ட சில ஒப்பந்ததார நிறுவனங்களை பிளாக் பட்டியலில் வைக்காமல்,  முதன்மை தலைமைப் பொறியாளர் கே. ராமமூர்த்தி பேரம் பேசி முடித்துவிட்டார். இந்த நிறுவனங்கள் மீண்டும் அதிகாரமையத்தில் வலம் வருகிறது.

  1. விழுப்புரம் – கடலூர் மாவட்டம் தென் பெண்ணையாற்றில் தளவானூர், எனதிரிமங்கலம் இடையே ரூ25.35கோடி கட்டப்பட்ட தடுப்பாணை 19.9.2020 திறக்கப்பட்டது. 25.01.2021 பெய்த கன மழையில் தடுப்பாணை உடைந்துவிட்டது. தளவானூர் உடைந்த தடுப்பணை கட்டியது பி.எஸ்.டி  இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்சன் தென்னரசு. பி.எஸ்.டி தென்னரசை கைது செய்ய வேண்டும், பிளாக் பட்டியலில் வைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் அறிக்கை வெளியானது.
  2.  கீழ் பவானி கால்வாய் திட்டம் மூலம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறந்தவுடன், சரியாக 55வது மைல் அருகே கண்ணவேலம்பாளையம் கிராமம் அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வெளியேறி மலப்பாளையம், கரையன்காடு மற்றும் வரவன் காடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள், 500 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கிவிட்டது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டது. இந்த கீழ் பவானி கால்வாய் திட்டப்பணிகளை ஒப்பந்தம் எடுத்ததும் பி.எஸ்.டி  இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்சன் தென்னரசுதான்
  3.  நாமக்கல் ஆட்சித் தலைவர் வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  ரூ260கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் இரண்டாவது தளத்தின் பணிகள் (சத்தியமூர்த்தி &கோ)  30.10.2020ம் தேதி  அதிகாலை, இடிந்து விழுந்தது. வட மாநிலங்களை சேர்ந்த இருவர் பலியானார்கள். இந்த பணி மேற்க்கொண்டது சத்தியமூர்த்தி & கோ.

            நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை

           சத்தியமூர்த்தி&கோ மூன்று பணிகளுக்கான டெண்டர் ரூ117.90கோடியும்,

           பி.எஸ்.தென்னரசு இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்சன் ஆறு பணிகளுக்கான டெண்டர்

          ரூ141.76கோடிக்கான பணிகளை டெண்டர் எடுத்து, கட்டுமான பணிகளை செய்து

          வந்தது.

  • சென்னை சாந்தோம் நெஞ்சாலையில் நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சி நிர்வாக இயக்குநரக உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் , ரூ100கோடி மதிப்பில் 10 மாடி கட்டிடத்தை கட்டியது P.S.K Engg Construction.. ரூ100கோடி மதிப்புள்ள கட்டிடத்தை பார்த்தால், மிகவும் கேவலமாக இருக்கிறது..

ஆனால் இந்த நிமிடம் வரை P.S.T Engg.construction, V.Satiyamoorthy &co, P.S.K Engg Construction மூன்று நிறுவனத்தையும் பிளாக் பட்டியலில் வைக்கவில்லை. ஆனால் இந்த நிறுவனங்கள், முதலமைச்சரை சந்தித்து, கொரோனா நிவாரண நிதி கொடுத்ததுதான் வேடிக்கையாக இருக்கிறது.

 கைது செய்யப்பட வேண்டியவர்கள், பிளாக் பட்டியலில் இருக்க வேண்டியவர்கள் மீண்டும் அதிகாரமையத்தில் ஒப்பந்த பணிகளை தொடருகிறார். P.S.T Engg.construction தென்னரசு, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்(கட்டிடம்) பின்னணியில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை தொடருகிறார்.

 இதைவிட கேவலம் தூத்துக்குடியில்  மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி பணியில் Steel Bus shelter பணி அதிகபட்சமாக ரூ50 இலட்சம் கூட மதிப்பு இல்லை. அந்த பணியை Sri Ram promoters Chennai ரூ1.54கோடிக்கு ஒப்பந்தம் எடுத்து முடித்துள்ளார். இந்த Steel Bus shelterஐ மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார் என்பதுதான் வேடிக்கையானது.

 இப்படி அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த/மோசடி செய்த பல ஒப்பந்த நிறுவனங்கள் திமுக ஆட்சியில் மீண்டும் அதிகாரமையத்தில் வலம் வந்து, பணிகளை தொடருகிறார்கள்.,.

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *