Breaking News

நகராட்சி மண்டல பொறியாளர்- கருப்பையாராஜாவின் அட்டூழியம்- கருப்பையாராஜா & நாராயணன் சிபாரிசுகள்- மறு ஆய்வு செய்யப்படுமா?…

   நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் கருப்பையாராஜா அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செங்கல்பட்டு மண்டல பொறியாளர் கருப்பையாராஜா மற்றும் மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணன் இருவரின் சிபாரிசுகள், பரிந்துரைகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அய்யா உத்தரவிட வேண்டும்.

 செங்கல்பட்டு மண்டலத்துக்குட்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கொடுத்த மாறுதல் தொடர்பான சிபாரிசுகளை, ஏதாவது காரணம் காட்டி கருப்பையாராஜாவும், நாராயணனும் ஒரங்கட்டிவிட்டார்கள். அதனால் செங்கல்பட்டு மண்டலத்துக்குட்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பையாராஜா மீது டன் கணக்கில் புகார்களை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறார்கள்..

 கருப்பையாராஜா, நாராயணன் இருவரிடமும் நேரிடையாக பணத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே சிபாரிசு செய்து, மாறுதல் ஆர்டர் பெற்று  தருகிறார்கள். என்ன நடக்குது என்று ஒண்ணுமே புரியவில்லை..

  1.  சுகாதார அதிகாரி அறிவுசெல்வம், பல்லவபுரம் நகராட்சியில் ஆறு வருடம் பணியாற்றிவிட்டு, மதிவாணன் ஆசியில் தாம்பரம் நகராட்சிக்கு மாறுதல் பெற்றார். மதிவாணன் பல போலி கோப்புகளில் கையெழுத்து போட சொல்ல, விஜிலென்ஸில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் மிஸ்டர் முகப்பேரிடம் ரூ10 இலட்சம் இலஞ்சம் கொடுத்து தேனி நகராட்சி மாறுதல் பெற்று சென்றுவிட்டார். அந்த அறிவுசெல்வம் கருப்பையாராஜா, நாராயணன் கூட்டணியில் ரூ10 இலட்சம் கொடுத்து மீண்டும் தாம்பரம் மாறுதல் பெற்றுள்ளார்.
  2.  பல்லவபுரம் நகராட்சி சுகாதார அதிகாரி கோவிந்தராஜனை, ஆணையராக இருந்த மதிவாணன், திருவள்ளூரிலிருந்து பல்லவபுரம் நகராட்சிக்கு அழைத்து வந்தார். மதிவாணன், கோவிந்தராஜன் கூட்டணி கொரோனா பெயரில் அடித்த கொள்ளை ரூ10கோடி. கருப்பையாராஜா கூட்டணி கோவிந்தராஜனை மீண்டும் திருவள்ளூர் நகராட்சிக்கு மாறுதல் செய்துள்ளார்கள்.
  3. செம்பாக்கம் நகராட்சி பொறியாளர் சண்முகம், திருத்தணி நகராட்சிக்கு மாறுதல் பெற கருப்பையாராஜா கூட்டணி ஆசிதான். ஏற்கனவே திருத்தணி நகராட்சியில் சண்முகம் பணியாற்றிய போது நடந்த ஊழல் தொடர்பாக விஜிலென்ஸில் விசாரணை நிலுவையில் உள்ளது.
  4.  நகரமைப்பு அதிகாரி வெங்கடேசன் அயல்பணியில் மறைமலைநகரிலிருந்து ஆவடி மாநகராட்சிக்கு மாறுதல் பெற்றார். தற்போது கருப்பையாராஜா, நாராயணன் ஆசியில் வெங்கடேசன் மீண்டும் நகரமைப்பு அதிகாரியாக மறைமலைநகர் அல்லது புதுக்கோட்டை நகராட்சிக்கு கோப்புகள் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.
  5. மாற்று திறனாளி ஆணையர் ஒருவரின் மாறுதலுக்கு நாராயணனுக்கு கொடுத்தது ரூ5இலட்சம்..
  6. நான் இலஞ்சம் வாங்க மாட்டேன், திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்ற முடியாது. என்னை மாற்றிவிடுங்கள் என்று கருப்பையாராஜா, நாராயணன் கூட்டணியில் கெஞ்சினார். திருவேற்காட்டிலிருந்து பரமக்குடி மாறுதல் செய்ய ரூ2இலட்சம் கடன் வாங்கி கொடுத்தார். திருவேற்காட்டில் நகரமைப்பு ஆய்வாளர் பதவி காலியாக உள்ளது. நகரமைப்பு ஆய்வாளர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக ஒருவரை நியமிக்க ரேட் ரூ5 இலட்சமாம்.
  7. பெரம்பலூர் நகராட்சி கணக்கு அதிகாரி சுந்தர் கும்பகோணம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.  பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சுந்தர் கருப்பையாராஜா, நாராயணன் கூட்டணியில் அடைக்கலமாகிவிட்டார். சுந்தர் மாறுதல் ஆணை ரத்து செய்ய கோப்புகள் வேகமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

       இப்படி கருப்பையாராஜாவும், நாராயணனும் கூட்டணி அமைத்து நகராட்சிகளில் உதவியாளர் முதல் ஆணையர் வரை பதவிகளை விலை பேசி விற்பனை செய்து வருகிறார்கள்.

கருப்பையாராஜா, நாராயணன் ஆசியில் ஊழல் வேலுமணியின் புரோக்கர் மிஸ்டர் முகப்பேர் மீண்டும் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்…

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *