Breaking News

தூத்துக்குடி – குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி- நகை கடன் & டெபாசிட் மோடி ரூ100கோடி… பின்னணியில் ஊழல் வேலுமணி பினாமி சந்திரன்- வங்கி செயலாளர் தேவராஜ் தலைமறைவு…

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் மற்றும் டெபாசிட் மோடி ரூ100கோடியை தாண்டும். இந்த மோசடியில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கியின் செயலாளர் தேவராஜ் தலைமறைவாகிவிட்டார். வங்கியின் செயலாளர் தேவராஜ், ஊழல் வேலுமணியின் பினாமி திருச்செந்தூர் சித்ராபார்க் சந்திரனுக்கு நெருக்கமானவர். இந்த மோசடியில் சித்ரா பார்க் சந்திரனுக்கு தொடர்பு இல்லை என்றாலும், வங்கியின் செயலாளர் தேவராஜ்யை காப்பாற்றி வருகிறார். அதனால் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் குற்றவாளிகள்தான்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது நகை கடன் மோசடி பல கோடிக்கு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. பல பைகளில் நகையோ, தங்கமோ இல்லை, காலியான பை மட்டும் கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

  அதே போல் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் டெபாசிட் சான்றிதழில் உள்ளது. ஆனால் டெபாசிட் பணம் எங்கே என்று தெரியவில்லை.  உதாரணமாக  சென்னை சரவணா ஸ்டோர்ஸ் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ12கோடி டெபாசிட் செய்துள்ளது. ஆனால் ரூ12கோடி டெபாசிட் தொகை, நகை அடமானத்துக்கு கொடுக்கப்பட்டதா என்பது தொடர்பான கணக்கு எதுவும் சரியாக இல்லை. போலியான டெபாசிட் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை கோடிக்கு போலியான டெபாசிட் சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. புகார்கள் டன் கணக்கில் குவிகிறது. இது வரை சுமார் ரூ9கோடிக்கு மோசடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 பல கோடி நகை கடன் மோசடி தொடர்பாக குரும்பூர்  தொடக்க வேளாண்மை வங்கியின்  தலைவர் முருகேசபாண்டியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் செயலாளர் தேவராஜ், துணைச்செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா, ஞானபாய், ஆழ்வார் குமார்  உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 நகை கடன் மற்றும் டெபாசிட்  மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரியாக திருச்செந்தூர் கூட்டுறவு சங்க பதிவாளர் வளன் மிக்கேல் தளபதி, வங்கி செயலாளர் தேவராஜின் இரண்டு  சொத்துக்கள் பறிமுதல் செய்துள்ளார். மேலும் பல அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பீல்ட் ஆபிசராக உள்ள இரண்டு பேர்  மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் சிவகாமி யால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இதுவரை குரும்பூர் வங்கி மோசடி தொடர்பாக ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பீல்டு ஆபீசர்கள் ஆய்வு செய்ய சென்றபோது வங்கியில் ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை . மேலும் பீல்டுஆபிஸர் தேவகுமார் உள்ளிட்ட பல பீல்டு ஆபிசர்கள் முறையான முறையில் தொடர்ந்து செயல்படாத காரணத்தினால் தான் இவ்வளவு பெரிய தொகை மோசடி நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமிக்கு தெரியவந்ததை அடுத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பீல்ட் ஆபீசர்கள் 2 பேர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த மோசடி தொடர்பாக ஆரம்பகட்டத்தில் வங்கி செயலாளர் தேவராஜ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் பிரச்சனையை வெளியே தெரியாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார் இந்த விவகாரம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முழுமையாக தெரியவந்ததை அடுத்து  தேவராஜ் மற்றும் வங்கி தலைவருக்கு ஆதரவு கரம் நீட்ட மறுத்துவிட்டார்.

  இதுதொடர்பாக  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  முழுமையாக எந்தவிதமான பாரபட்சமின்றி விசாரணை நடைபெற வேண்டும் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கூட்டுறவு சங்க விதிகளின்படி வங்கித் தலைவர் வங்கி செயலாளர் தேவராஜ்,  வங்கி துணைச் செயலாளர் ஆகிய 3 பேர் மீதும் கூட்டுறவு சங்க வழக்குப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் மற்றும் டெபாசிட் மோசடி ரூ100கோடியை தாண்டும். இந்த மோசடியில்  மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பல மாஜி அதிமுக அமைச்சர்கள் பலர் சிக்குவார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *