Breaking News

தமிழ்நாடு மின்சாரவாரியம்.. மின் மீட்டர் கொள்முதலில் ரூ100கோடி ஊழல்- 7 நாட்களில் கொள்முதல் 36.49 இலட்சம்.. ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?…

  தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் 2020 அக்டோபர் மாதம் முதல் மார்ச் 2021 வரை நிலக்கரி கொள்முதல், மின் மீட்டர் கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது. 2021 பிப்ரவரி மாதம் மட்டும் 36.49 இலட்சம் மின் மீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மின் மீட்டர் கொள்முதலில் மட்டும் ரூ100கோடி  கமிசனாக பெறப்பட்டுள்ளது.

            மின் மீட்டர் கொள்முதல் பட்டியல் இதோ…

  1. 97/29.10.2020 -110/1A, 0.5s மின்னூட்ட மின் அளவி – 700
  2. 96/29.10.2020 – 110/1A, 0.5s மின்னூட்ட மின் அளவி – 700
  3. 41/18.09.2020- 240 V/5A எல்.டி.சி.டி கலப்பு மின் அளவி – 2500
  4. 42/18.09.2020 -240  V/5A  எல்.டி.சி.டி கலப்பு மின் அளவி – 10,400
  5. 143/21.01.2021- 110 V/5A  உயர் அழுத்த கலப்பு மின் அளவி-1268
  6. 150/1.02.2021- மும் முனை DLMS(20-100A) மின்னணு கலப்பு மின் அளவி –  4,500
  7. 167/23.02.2021- ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி – 3.95.000
  8. 171/24.02.2021- ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி –  8,54,000
  9. 168/23.02.2021- ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி –  4,30,500
  10. 169/24.02.2021 – ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி – 4,29,000
  11. 172/25.02.2021- ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி – 4,30,000
  12. 170/24.02.2021 – ஒரு முனை DLMS(5-20A) மின்னணு கலப்பு மின் அளவி – 4,32,000
  13. 208/26.02.2021- மும்முனை DLMS(10-60A) மின்னணு கலப்பு மின் அளவி –  1,25,000
  14. 207/26.02.2021 -மும்முனை DLMS(10-60A) மின்னணு கலப்பு மின் அளவி –  1,26,563
  15. 206/26.02.2021- மும்முனை DLMS(10-60A) மின்னணு கலப்பு மின் அளவி -1,31,250
  16. 205/06.02.2021- மும்முனை DLMS(10-60A) மின்னணு கலப்பு மின் அளவி – 1,28,750
  17. 209/26.02.2021 – மும்முனை DLMS(10-60A) மின்னணு கலப்பு மின் அளவி – 1,62,500

ஆக மொத்தம் மூன்று மாதங்களில் மட்டும் மின் மீட்டர் 36,64,731(36.64 இலட்சம்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 36.34 இலட்சம் மீட்டர் கொள்முதல்  செய்யும் அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் 5 இலட்சம் மின் இணைப்புகள் கூட கொடுக்கப்படவில்லை. அதிகபட்சமாக புதிய மின் மீட்டர் மாற்றியது 7 இலட்சம் இருக்கும்..

 அதுவும் 7 நாட்களில் 36.49 இலட்சம் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டதை பார்க்கும் போது, ஊழல் நடந்துள்ளது உறுதியாகிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறை மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மாபியா அதிகாரிகள் கும்பல் ஒரு மின் மீட்டருக்கு ரூ150 முதல் ரூ300 வரை கமிசன் வாங்கியிருக்கிறார்கள். செப்டம்பர் 2020, அக்டோபர் 2020, பிப்ரவரி 2021 ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் மின் மீட்டர் கொள்முதலில் அடித்த கொள்ளை ரூ100கோடியை தாண்டும்..

 மின்சாரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜியும், மின்சாரத்துறை சேர்மனாக ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்  இருவரும் மின் மீட்டர் கொள்முதல் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.  மின்சாரவாரிய சேர்மன் ராஜேஷ்லகானி மின் மீட்டர் 36.64 இலட்சம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *